Friday, June 13, 2014

நானும் தமிழும் (பாகம்1)


பாக்கள் நிறைய உருவெடுத்து - என்
   பாதையில் நிறையக் காணுங்கள்
பூக்கள் வகுத்தே நிற்பது போல் - அது
   பூமியில் சிரிப்பதைப் பாருங்கள்.


காற்றின் நிறத்தையும் சொல்லிவிடும் - என்
   காதில் காதலைத் தந்து விடும்
சாற்றினை எடுத்தே தருகின்றேன் - அது
 சரித்திரம் நிறைக்கும் முந்திவிடும்


சருகுகள் பலரைச் சாய்த்துவிடும் - அது
    சாந்தம் செய்து வென்றுவிடும்
மெருகுகள் ஏதும் தேவையில்லை - அது
   மென்மை அடைந்தே ஓங்கி வரும்

சூரியன் கூட ஓடிவரும்-என்
   சுந்தர கவியினை தேடிவரும்
வீரியம் மிகுந்த தமிழ்கவியாம்- எனை
   விண்ணில் ஏற்றி ஒளிபரப்பும்


வாடைகாற்றும் மெல்லவந்து - அதன்
   வகையின் தன்மை கேட்டுக்கொள்ளும்
தாடைநரம்புகள் வெடிக்கவென்றே - என்
   தமிழின் சந்தம் பாட்டு வெல்லும்


திசையின் அசைவுகள் ஒவ்வொன்றும் - என்
   தீந்தமிழ் கேட்டு குனிந்து விடும்
விசைகள் அதுவும் பலகொண்டு - என்
    வீரக்கவிதைகள் முனைந்து வரும்


வெற்றியின் பதக்கம் முழக்கமிடும் - அது
   வேதனை பலவும் அழிக்கவரும்
முற்றுமாய் அன்பை சுமந்து வரும் - அட
   முத்தமிழ் போல் தான் செழிக்கத்தரும்.


சிந்திய முத்துக்கள் அனைத்துமே - என்
   சிந்தனை நிரம்பியே செம்மைகொளும்
விந்திய மலையின் புகழிதனை - அது
வேண்டிய மட்டும் வாங்கிக்கொள்ளும்    ................(.தொடரும்)



4 comments:

  1. விந்திய மலையின் புகழை அடைய வாழ்த்துக்கள்
    அருமையான கவிதை சகோதரி..

    ReplyDelete
  2. சேதுராமன்June 13, 2014 at 4:41 PM

    என்னங்க நீங்க. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கட்டுரை, சிறுகதை, அப்டீன்னு எல்லாத்துலயும் பின்றீங்க... நினைச்சுக்கூட பாக்க முட்டிலங்க. எவ்ளோ ஆழமா அழகா வார்ததைகளை வச்சு விளையாடுறீங்க. உண்மையிலேயே சந்தோசமாயிருக்குங்க. கண்டிப்பா நீங்க பெரிய லெவலுக்கு வருவீங்க. பீளீஸ்ங்க உங்க புத்தகங்கள் ஒண்ணொண்ணா பதிவேற்றுங்களேன். நேற்று என் தளம் வந்து பாத்த்துக்கு நன்றிங்க

    ReplyDelete
  3. வரிகள் ஒவ்வொன்றும்
    முத்துக்கள்தான்
    தொடருங்கள்
    சகோதரியாரே

    ReplyDelete