Tuesday, May 13, 2014

உழைப்பே மேன்மை

உழைப்பு அடிகம் செய்வாயேல்
உண்மை வெற்றி உனக்குவரும்
களைப்புக் கொண்டு தூங்குவோர்
கலங்கும் வாழ்வு வாழ்வாரே

பிழைப்பு சிறக்க நாளும் நீ
பெரிதும் உழைப்பை நம்பிடுவாய்
கவலை இல்லா வாழ்வையும்
கருத்தாய்த் தந்திரும் நமக்குமே

இந்திய நாடு உயர்ந்திடவே
எல்லோரும் உழைப்போம் வாருங்கள்
இழிவு என்பதே இதிலில்லை
இன்பன் ஒன்றே கண்டிடலாம்

உண்டும் உறங்கியும் வாழ்ந்திட்டால்
ஒருவரும் மதியார் அறிவீரே
தொண்டில் முன்னணி வகித்திடுவீர்
தூயவர் எனும்பெயர் பெற்றிடுவோம்
************************************************

1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:21 AM

    குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்று அவசியம் வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete