Monday, May 26, 2014

தேர்வுகள்

   வருடாவருடம் ஏதேனும் ஒரு தேர்வு எழுதும் நான் ( இது வரை M.Com.,M.A..,M.Phil.,B.Lit.,P.G.D.J.M.C.,P.G.D.V.E., படித்திருக்கிறேன்)  இந்த ஆண்டு எம்.ஏ. தமிழ் எழுதினேன். தேர்வின் போது  தேர்வு அறை பற்றிய விவரம் அறிய வேண்டியிருப்பதால் சற்று முன்னரே செல்ல வேண்டியிருந்தது. அப்போது (1) இன்செண்டிவ் காக படிக்கிறீர்களா என்றார் ஒருவர். (2) ஒரு இளம்பெண் உங்களுக்குத்தான் வேலை கிடைத்து விட்டதே இன்னும் ஏன் படிக்கிறீர்கள் என்றால் ஒருவித அலுப்புடன். நான் ஒரு எழுத்தாள்ர் என்று அறிந்த ஒரு நண்பர் “என்ன நீங்கள் இன்னுமா தமிழ் படிக்கவில்லை!  என்றார் அதிர்ச்சியுடன். (3) ஓ! மற்றுமொரு பதவிஉயர்விக்காகப் படிக்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு சற்றும் என் பதிலை எதிர்பார்க்காமல் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள் என்று அவராக சொல்லி விட்டுப் போனார் ஒரு நண்பர். வேறு துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழி இந்தப் படிப்பு முடிந்தவுடன் உனக்கு எவ்வளவு பணம் கூடுதலாகக் கிடைக்கும்  என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் . இல்லை இந்தப் படிப்பினால் எனக்கு எந்த பணப்பயனும் இல்லை என்பதை அறவே நம்ப மறுத்தாள் . என் உறவினர்களுக்கோ நான் படிப்பதும் தேர்வுகள் எழுதுவதும் சுத்தமாக பிடிப்பதில்லை. எந்தவித பலனும் இன்றிப் படிக்கிறாள் என்று நேராகவே குற்றம் சாட்டினாள் நெருங்கிய உறவுக்கார பெண்மணி ஒருத்தி. ஆக ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்றால் ஒன்று பணப்பலன்கள் கிடைக்க வேண்டும் அல்லது மதிப்பு கூட வேண்டும் அதாவது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள் . முடிந்த வரை படிப்பு வாழ்வை நிறுத்தி விட வேண்டும் என்று ஆண் பெண் பால் வேறுபாடின்றி இந்தக் கருத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு என் மேற்படிப்புகள் கேலிக்கூத்தாகவும் எள்ளி நகையாடலாகவுமே இருக்கிறது.
   (1) வேலையத்துப் போய் படிக்கிறா  (2) தலைக்கணம் பிடிச்சவ (3) புருசன் சம்பாதிக்கிறதையும் தான் சம்பாதிக்கிறதையும் இப்படி தெண்டமா செலவு பண்றா (4) பிள்ளைகள கவனிக்காம் இதென்ன இப்ப போய் படிக்கிறது? பாவம் அவள் பிள்ளைகள் (5) பெரீரீரீஇய அறிவாளினு நினப்பு? (6) பேருக்குப் பின்னாடி எவ்ளோ பட்டம் நு எல்லாரும் சொல்லனுமாங்... அதான்... -------இது போன்ற இளக்காரப்பேச்சுக்கள் என்னை நோக்கி வந்தது என்பதையும் அறிவேன் நான். வருத்தமாய்த்தான் இருக்கிறது. இவ்ர்கள் தான் படிக்காவிட்டாலும் பிறர் படிப்பதை ஒரு கேலியாகவோ, வேண்டாததாகவோ மாற்றி விடுகிறார்கள்.
   படிப்பது என்பது பணமேம்பாட்டுக்கு மட்டுமே என்று நினைக்கும் இவர்கள் அது மனமேம்பாட்டுக்கும் தான் என்று நினைக்கும் காலம் எப்போது வரும்?

8 comments:

  1. படிப்பது என்பதே சம்பாதிப்பதற்குத்தான் என்னும் ஒரு உணர்வு ஏற்பட்டு வெகு காலமாகிவிட்டது. வேலை கிடைக்காமல் இருப்பவரைக் கேட்டால் கூட, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா-
    அவர் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்கிறார்.
    படித்து முடித்து விட்டோம் என்ற அறியாமையில் உழல்பவர்கள் நம்மவர்கள்
    தொடர்ந்து படியுங்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒருவழியாக தேர்வுகள் எழுதி முடிதுவிட்டீர்கள் போலிருக்கிறது சகோதரி..

    உங்களைப் பார்த்தல் பொறாமையாக இருக்கிறது...

    தொடர்ந்து படிப்பதில் நீங்கள் ஆண்டனி அய்யாவை முந்திவிடுவீர்கள் போலவே...
    அவர் எனக்கு தெரிந்து ஐந்து எம்.ஏ ஒரு எம். எஸ்.சி.

    வாழ்த்துக்கள்
    www.malartharu.org

    ReplyDelete
  3. வணக்கம்

    படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல... எப்போதும் படிக்கலாம் என்பதை சொல்லியுள்ளீர்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உண்மைதான்! நமது சமூகத்தில் இந்த மனப்பாங்கு அதிகரித்து வருகிறது! என்று அகலுமோ?!

    ReplyDelete
  5. முருகானந்தன்May 27, 2014 at 7:07 AM

    உங்களைப் போல் எல்லாப் பெண்களும் இருந்தால் நாடு நன்றாகத்தான் இருக்கும்....நீங்கள் முத்துநிலவன் அய்யாவின் வார்ப்பு என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நாகப்பன்June 5, 2014 at 4:23 AM

    விரைவில் phd பண்ணுங்கள். என் வாழ்த்துக்கள்

    ReplyDelete