Monday, March 3, 2014

என் இறைவா


என் இறைவா
நேற்றி இருந்த கட்சி
இன்று இல்லை
இன்று இருக்கும் கூட்டணியும்
நாளை இல்லை
இங்கு
எதிலும் எப்போதும்
நிரந்தரம் இல்லை
ஆனால்
நிரந்தரம் என்பது போல்
ஏனிந்த ஆராவாரங்கள்?
இதெல்லாம் ஒரு புறமிருக்க
நாளை வரப்போகும் ஆட்சியாவது
நல்லதாய் இருக்குமோ என்னவோ
இங்கு
கஷ்டப்படுவதெல்லாம் மக்கள்
நஷ்டபடுவதெல்லாம்
அவர்கள் வாழ்க்கை
ஆனால்
பேச்சுக்கள் தொடர்கிறது
விளம்பரம் வளர்கிறது
அநியாயமே அரங்கேறுகிறது
இதையல்லாம் நீ
பார்ப்பாயா?
பார்க்க மாட்டாயா?
உனக்கு எதுவும் தெரியாதா?
இங்கு
அநியாயங்களே அரங்கேறுமெனில்
நீ எதற்கு?
இங்கு அழுகைகளே
வாழ்க்கையெனில்
உனக்கு வழிபாடு எதற்கு?
இங்கு
தொல்லைகளே தோழமையாகுமெனில்
உனக்குக் கோயில்கள் எதற்கு?
இங்கு
தர்மங்கள் வெற்றியாக வில்லை
உண்மைகள்
ஊமையாகிப் போனது
பொய்களே பொலிவுடன் வாழ்கிறது
இங்கு
எவர் வாழ்க்கையிலும் உறுதிப்பாடில்லை
எவரிடமும் கொள்கைகள் இல்லை
இங்கு
எங்குமே அமைதியில்லை
எங்குமே
கொந்தளிப்பு அடங்கவில்லை
என் இறைவா
எதற்காக இப்படி செய்கிறாய்?
ஏனிந்த அவலம்?
பதில் கொடு! பதில் கொடு!
*****************************************

1 comment:

  1. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார், மாறும் என நம்புவோம்!! கவிதை மிகவும் அருமை!! வாழ்த்துகள்.....

    ReplyDelete