Sunday, November 10, 2013

வடிவமைக்கப்பட்ட நான்

ஆளாளுக்கு
என்னை
வரைகிறார்கள்; வடிமைக்கிறார்கள்
அலுவலகத்தோழிகளுக்கு
ஒருமாதிரியாகவும்
அண்டை வீட்டுத் தோழிகளுக்கு
ஒருமாதிரியாகவும்
தோன்றும் நான்
காட்சிப்பொருளாகவும்
ஆகிறேன்
மேற்கண்டவர்களின் கணவர்களுக்கு!
அலுவலகத்தின் நபர்களுக்கும்
ஏதோ ஒரு கற்பனைப் பொருளாகிறேன்
நிற்கும் போதோ பேசும் போதோ
உணர்வுகளை, கருத்துக்களை
பரிமாறிக்கொள்ளும் போதோ
அவரவர்கள்
புரிந்துகொண்டநிலையிலேயே
என்
மனத்தோற்றமும் வடிவமைக்கப்படுகிறது
குடும்பத்திலும்
மாறியும், மாற்றியுமே
சிந்திக்கின்றனர்.
அம்மாவீட்டு சொந்தங்களுக்கு
ஒரு மாதிரியாகவும்
அவர் வீட்டு சொந்தங்களுக்கு
வேறு மாதிரியாகவும்
தெரிகிறேன்
ஆனாலும்
இன்னும் யாரும் என்னை
நானாய் இருக்கும் நானாய்
அறியவில்லை
அம்மா முதற்கொண்டு!
**********************************************************************************

1 comment:

  1. மலர்மகன்June 17, 2014 at 9:20 PM

    அடக் கடவுளே...உங்களையேவா......சிங்கத்தை சாச்சுப்புட்டாங்களே

    ReplyDelete