Sunday, November 10, 2013

தவிர்க்க இயலாதவை

தவிர்க்க இயலாத காரணத்தால்
என்று இவர்கள்
சொல்லும் காரணம் எல்லாம்
மிக எளிதாக தவிர்க்க
இயலுமாய்தான் இருக்கிறது
ஆனாலும்
சொல்லப்படுகின்றன
தவிர்க்க இயலவில்லை
என தவிர்க்க இயலாமல்.........!
தவிர்க்க  இயலாமல்
பெற்றுக்கொள்கின்றனர்
தவிர்க்க இயலும் என நினைத்த
தவிர்க்க இயலாதவைகளை.............!

1 comment: