Saturday, October 26, 2013

பொய்யாகாத பொய்

எப்போதும்
தயாரிக்கப்பட்ட பொய்களுடன்
அலைகிறார்கள் மனிதர்கள்!
பொய் சொல்லும் போதெ
இந்தப் பொய்யை
கடைசி வரை
சொல்லிவிட முடியுமா
என்ற சந்தேகம் வந்து விடுகிறது எனக்கு
பொய் சொல்லும் மனிதர்களிடம்
பேசும் போதெல்லாம்
இவர்கல் என்னிடம்’
பொய் பேசுகிறார்களே
என்ற வருத்தம் அமுங்கி
அந்தக் கோபமும் அடங்கி
இவர்களால்-இதை
கடைசி வரை காப்பாற்ற முடியுமா?
இவர்கள் பொய் சொல்கிறார்கள் என
நான்
கண்டுபிடித்தது தெரிந்தால்
வருந்துவார்களோ
என்று துடிக்கிறது
எனது எண்ணங்கள்
எனவே
மிக சர்வ ஜாக்கிரதையாய்
அவர்களின் பொய்யை
மெய்யாகவே ஏற்க முயல்கிறேன்
என் முகம் காட்டிக் கொடுத்து விடுமோ
என்ற கவலைகள்
அடிக்கடி வருகிறது
அவசரப்பட்டு வந்த பொய்களோ
அனுபவத்தால் விளைந்த பொய்களோ
இந்தப் பொய்கள்
பொய்க்காமல் இருக்கட்டும்
என்று முடிகின்றன
எனது வேண்டுதல்கள்!

**************************************

4 comments:

  1. எப்படியும் ஒரு நல்ல அவர்கள் தானாக உணர்ந்து திருந்துவார்கள்...

    ReplyDelete
  2. எப்படியும் ஒரு நாள் அவர்கள் தானாக உணர்ந்து திருந்துவார்கள்...

    ReplyDelete
  3. பொய் தவறில்லை நன்மை தருமெனில் தோழி

    ReplyDelete
  4. புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய்ம்மையும் வாய்மையிடத்த.
    செல்லிடப் பேசி வந்ததிலிருந்து பேசாத வாயெல்லாம் பொய் பேசத் தொடங்கிடுச்சு.

    ReplyDelete