அம்மாவை
வணங்குகிறேன்
எதிர்பலையின்
சூழலுக்குள்
எப்போதும் சிக்காமல்
தனக்கென
தனி உலகம் கொண்டு
அரசாளும்
அம்மாவை வணங்குகிறேன்
தமிழ் நெஞ்சமெலாம்
அரசாளும்
அம்மாவை வணங்குகிறேன்
கமண்டலத்துள்
அடைபட்ட காவிரியை மீட்டவளே!
இன்னா செய்தோரும்
உன்னிடம்
”இன்னாவோ” இருக்குதென்று
பார்க்க வைப்பாய்
பாஸ்மார்க் தான்
எப்போதும் உந்தனுக்கு
டாஸ்மாக்
மட்டும் இல்லையென்றால்
நிமிர்ந்த தலை உனக்கு
மா நிலத்து அமைச்செல்லாம்’
வளைந்து நின்றே
உனை வணங்கும்
எப்போதும்
எம் நாவில் உன்னாட்சி
பாராளும் நாளும் வரும்
பார்த்துக்கொள்
உன் மகளைப் பத்திரமாய்...
தமிழே அம்மா...
உனைததான் வணங்குகிறேன்
சத்தியமாய் இந்த வாழ்த்து
தமிழ் அன்னைக்குத்தான்
கம்பன்
********
தீயின் கர்ப்பத்தில்
திரண்டெழுந்து வந்தவனே
நாவின் அடியெல்லாம்
நற்றமிழைத் தந்தவனே
தீயாக வேலை செய்து
திரண்ட கதை சொல்லிடவா
பூவாக என்னுள்ளே
பூத்த விதை தள்ளிடவா?
காதலாக மாறி உந்தன்
கன்னித்தமிழ் சுவைப்பேனோ
மோதலாக எழுந்து தானும்
மயங்கித்தான் கிடப்பேனா
சாவுக்குள் என் தேகம்
சரிந்தே தான் போகையிலும்
பூவுக்குள் இருப்பது போல்
புன்னகை தான் மாறாதோ
கண்ணுக்குள் உனி வைத்து
கவலை அற மாட்டேனா
புண்ணுக்குள் தள்ளியதை
புறந்தள்ளி எழுவேனா
மானுடமோ உன் காதை
மகிழத்தான் கூடேனோ
ஊனுடம்பு எல்லாத்துள்
உளீ செய்து தேடேனோ
கேடெல்லாம் அழித்துத்தான்
கிளர்ச்சியுற மறப்பேனா
கிளர்ந்து வரும் தமிழதிலே
கீழ்வானம் திறப்பேனோ
மூச்சற்று போனபின்னும்
முத்தமிழை கொள்வேனா
பேச்சற்றுப் போனாலும்
பிள்ளைததமிழ் அள்வேனோ
தலைக்குள்ளே உனைச்சுற்றி
தடுமாறிப் போனேனோ
உலைகூட வைக்காமல்
உனை எடுத்து உண்ணேனோ
சிலை வைத்து சிந்தனையில்
சீராக வைக்கின்றேன்
மலை எடுத்துப் படித்தனால்
மாப்புகழைப் கொள்கின்றேன்
வரவேற்க
எனைப் பணித்தார்
நெஞ்சம் பரவும்
கவிதையின் அலைகளுக்கு
கடிகார முட்களினால்
கட்டிவிட்டு
வரவேற்க்கத்தான் எனைப் பணித்தார்
புதுகையின் திருவிழா
கம்பன் புகழ் பாடும்
ஒருவிழா
பூமி குளிர்ந்தது போல்
உள்ளரங்கில்
தமிழ் சாரல் விழும்
தனிவிழா
கதிர் வந்தபின்னே விடியும்
எங்கள் கதிரேசன்
வந்தபின்னே
கவிதை தந்த பின்னே
எதுவும்
இங்கு தொடங்கும்
தொடக்கக்கவிதை
தொடுக்கக்காத்திருக்கும்
கதிரேசன் அய்யாவே
மானியங்களின்
பிரச்சனைகள்
உங்களுக்கில்லை
விலையில்லா
உம் கவிதை வாங்க
வரவேற்றுக் காத்திருக்கிறோம்
பின் குறிப்பு
தயவு செய்து
எடைக்குறைக்காமல்.........
சடையப்ப வள்ளல்கள்
எப்போதும் இருக்கிறார்கள்
புதிய கம்பர்கள் தான்
பூக்க மறுக்கிறார்கள்
கம்பன் அழகு
தமிழ் அழகு
கவி அழகு
போதாது அழகென்று
முன்னின்று
நடத்த வந்த முருகே
அழகே
சிலம்பென்னும்
அணி செய்த
இளங்கோவின் புகழ் பரப்பும்
பெருங்கோவே....
வைர மாணிக்கமே........
வந்திங்கு கதிர் பரப்பியதற்கு
கரம் கூப்பி
வரவேற்கிறோம்
அரங்கு
கூடுதலாய்
தடையில்லா ஒளி பெற்றது
தங்களால்...
கல்
வில்
தேன்
பாதுகை
முடி
மட்டுமல்ல
உங்கள் கவிதைப்பூக்களுக்காகவும்
காத்திருப்பதே சுகம்
என்க் காத்திருக்கிறோம்
காதற்கவியே
அப்துல் காதற்கவியே
செந்தேன் கவிதைகளுக்காக
செவிகள் காத்திருக்கின்றன
தேனள்ளி நிரப்புங்கள்
வான்முட்டும்
உம் கவிதை
இனச்சோர்வைத் தட்டட்டும்
சுயமானம் சுட்டட்டும்
அரங்கம் கை தட்டட்டும்
தரம் தாழா
கவிதை தர வந்திருக்கும்
கவிதைக்காரர்க:ளே
வரவேற்கிறது புதுக்கோட்டை
உங்கள்
கவிதா மலர்கள்
கோர்த்து
கவிக்கோட்டை கட்டுங்கள்
எங்களுக்கு த்தெரியும்
இன்று
அரங்கத்துள்
தமிழ் மின்னல் தெறிக்கும்
இடி இறங்கும்
பூந்தூரல் வலுக்கும்
புதுப்புனலாய்
மழை இருக்கும்
கவலைப்படாதீர்கள்
குடையோடு தான்வந்திருக்கிறேன்
உடையட்டும் உங்கள்
கவிதை அணைகள்
புனலாடக் காத்திருக்கிறோம்
புதுக்கவிதை சொல்லுங்கள்
காத்திருப்பின் சுகம்
சொல்ல வந்தோரே
காத்திருக்கிறோம்’
கரம் தட்டிப் பூப்போட
கம்பன் பாடல் மட்டும் அல்ல
கவனித்துப் பாருங்கள்
கம்பன் விழாக்களிலும்
சமத்துவம் இறுக்கும்
குகன்
சுக்ரீவன்
விபீடணன்
என்
சனத்துவம் சொன்ன
கம்பனின் விழாவில்
தமிழ் மட்டும் உண்டு
மதங்கள் இல்லை
விழாவின் தலைமை
முன்னிலை
கவித்தலைமை
ஒப்பு நோக்கிப்பாருங்கள்
மதங்க்ளின் சமத்துவம் தெரியும்
கம்பனில் மூழ்குங்கள்
எல்லாம் புரியும்
வந்திருக்கும் பெரியோரே
வகையான சான்றோரே
பத்திரிக்கை நண்பர்களே
வானொலியின் அன்பர்களே
ஒளிபெருக்கி செவிமடுக்கும்
அத்தனை
உள்ளங்களையும்
வரவேற்று மகிழ்கின்றோம்
வாய்ப்புக்கு நன்றி
வணங்குகிறேன்
எதிர்பலையின்
சூழலுக்குள்
எப்போதும் சிக்காமல்
தனக்கென
தனி உலகம் கொண்டு
அரசாளும்
அம்மாவை வணங்குகிறேன்
தமிழ் நெஞ்சமெலாம்
அரசாளும்
அம்மாவை வணங்குகிறேன்
கமண்டலத்துள்
அடைபட்ட காவிரியை மீட்டவளே!
இன்னா செய்தோரும்
உன்னிடம்
”இன்னாவோ” இருக்குதென்று
பார்க்க வைப்பாய்
பாஸ்மார்க் தான்
எப்போதும் உந்தனுக்கு
டாஸ்மாக்
மட்டும் இல்லையென்றால்
நிமிர்ந்த தலை உனக்கு
மா நிலத்து அமைச்செல்லாம்’
வளைந்து நின்றே
உனை வணங்கும்
எப்போதும்
எம் நாவில் உன்னாட்சி
பாராளும் நாளும் வரும்
பார்த்துக்கொள்
உன் மகளைப் பத்திரமாய்...
தமிழே அம்மா...
உனைததான் வணங்குகிறேன்
சத்தியமாய் இந்த வாழ்த்து
தமிழ் அன்னைக்குத்தான்
கம்பன்
********
தீயின் கர்ப்பத்தில்
திரண்டெழுந்து வந்தவனே
நாவின் அடியெல்லாம்
நற்றமிழைத் தந்தவனே
தீயாக வேலை செய்து
திரண்ட கதை சொல்லிடவா
பூவாக என்னுள்ளே
பூத்த விதை தள்ளிடவா?
காதலாக மாறி உந்தன்
கன்னித்தமிழ் சுவைப்பேனோ
மோதலாக எழுந்து தானும்
மயங்கித்தான் கிடப்பேனா
சாவுக்குள் என் தேகம்
சரிந்தே தான் போகையிலும்
பூவுக்குள் இருப்பது போல்
புன்னகை தான் மாறாதோ
கண்ணுக்குள் உனி வைத்து
கவலை அற மாட்டேனா
புண்ணுக்குள் தள்ளியதை
புறந்தள்ளி எழுவேனா
மானுடமோ உன் காதை
மகிழத்தான் கூடேனோ
ஊனுடம்பு எல்லாத்துள்
உளீ செய்து தேடேனோ
கேடெல்லாம் அழித்துத்தான்
கிளர்ச்சியுற மறப்பேனா
கிளர்ந்து வரும் தமிழதிலே
கீழ்வானம் திறப்பேனோ
மூச்சற்று போனபின்னும்
முத்தமிழை கொள்வேனா
பேச்சற்றுப் போனாலும்
பிள்ளைததமிழ் அள்வேனோ
தலைக்குள்ளே உனைச்சுற்றி
தடுமாறிப் போனேனோ
உலைகூட வைக்காமல்
உனை எடுத்து உண்ணேனோ
சிலை வைத்து சிந்தனையில்
சீராக வைக்கின்றேன்
மலை எடுத்துப் படித்தனால்
மாப்புகழைப் கொள்கின்றேன்
வரவேற்க
எனைப் பணித்தார்
நெஞ்சம் பரவும்
கவிதையின் அலைகளுக்கு
கடிகார முட்களினால்
கட்டிவிட்டு
வரவேற்க்கத்தான் எனைப் பணித்தார்
புதுகையின் திருவிழா
கம்பன் புகழ் பாடும்
ஒருவிழா
பூமி குளிர்ந்தது போல்
உள்ளரங்கில்
தமிழ் சாரல் விழும்
தனிவிழா
கதிர் வந்தபின்னே விடியும்
எங்கள் கதிரேசன்
வந்தபின்னே
கவிதை தந்த பின்னே
எதுவும்
இங்கு தொடங்கும்
தொடக்கக்கவிதை
தொடுக்கக்காத்திருக்கும்
கதிரேசன் அய்யாவே
மானியங்களின்
பிரச்சனைகள்
உங்களுக்கில்லை
விலையில்லா
உம் கவிதை வாங்க
வரவேற்றுக் காத்திருக்கிறோம்
பின் குறிப்பு
தயவு செய்து
எடைக்குறைக்காமல்.........
சடையப்ப வள்ளல்கள்
எப்போதும் இருக்கிறார்கள்
புதிய கம்பர்கள் தான்
பூக்க மறுக்கிறார்கள்
கம்பன் அழகு
தமிழ் அழகு
கவி அழகு
போதாது அழகென்று
முன்னின்று
நடத்த வந்த முருகே
அழகே
சிலம்பென்னும்
அணி செய்த
இளங்கோவின் புகழ் பரப்பும்
பெருங்கோவே....
வைர மாணிக்கமே........
வந்திங்கு கதிர் பரப்பியதற்கு
கரம் கூப்பி
வரவேற்கிறோம்
அரங்கு
கூடுதலாய்
தடையில்லா ஒளி பெற்றது
தங்களால்...
கல்
வில்
தேன்
பாதுகை
முடி
மட்டுமல்ல
உங்கள் கவிதைப்பூக்களுக்காகவும்
காத்திருப்பதே சுகம்
என்க் காத்திருக்கிறோம்
காதற்கவியே
அப்துல் காதற்கவியே
செந்தேன் கவிதைகளுக்காக
செவிகள் காத்திருக்கின்றன
தேனள்ளி நிரப்புங்கள்
வான்முட்டும்
உம் கவிதை
இனச்சோர்வைத் தட்டட்டும்
சுயமானம் சுட்டட்டும்
அரங்கம் கை தட்டட்டும்
தரம் தாழா
கவிதை தர வந்திருக்கும்
கவிதைக்காரர்க:ளே
வரவேற்கிறது புதுக்கோட்டை
உங்கள்
கவிதா மலர்கள்
கோர்த்து
கவிக்கோட்டை கட்டுங்கள்
எங்களுக்கு த்தெரியும்
இன்று
அரங்கத்துள்
தமிழ் மின்னல் தெறிக்கும்
இடி இறங்கும்
பூந்தூரல் வலுக்கும்
புதுப்புனலாய்
மழை இருக்கும்
கவலைப்படாதீர்கள்
குடையோடு தான்வந்திருக்கிறேன்
உடையட்டும் உங்கள்
கவிதை அணைகள்
புனலாடக் காத்திருக்கிறோம்
புதுக்கவிதை சொல்லுங்கள்
காத்திருப்பின் சுகம்
சொல்ல வந்தோரே
காத்திருக்கிறோம்’
கரம் தட்டிப் பூப்போட
கம்பன் பாடல் மட்டும் அல்ல
கவனித்துப் பாருங்கள்
கம்பன் விழாக்களிலும்
சமத்துவம் இறுக்கும்
குகன்
சுக்ரீவன்
விபீடணன்
என்
சனத்துவம் சொன்ன
கம்பனின் விழாவில்
தமிழ் மட்டும் உண்டு
மதங்கள் இல்லை
விழாவின் தலைமை
முன்னிலை
கவித்தலைமை
ஒப்பு நோக்கிப்பாருங்கள்
மதங்க்ளின் சமத்துவம் தெரியும்
கம்பனில் மூழ்குங்கள்
எல்லாம் புரியும்
வந்திருக்கும் பெரியோரே
வகையான சான்றோரே
பத்திரிக்கை நண்பர்களே
வானொலியின் அன்பர்களே
ஒளிபெருக்கி செவிமடுக்கும்
அத்தனை
உள்ளங்களையும்
வரவேற்று மகிழ்கின்றோம்
வாய்ப்புக்கு நன்றி
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் சமூகப் பார்வைகள், ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கவிதைகள் சிலவற்றை ரசியுங்கள்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Diwali-without-crackers.html
உங்கள் வரவேற்புரை கேட்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.(பாக்கியம்) உச்சரிப்பு அருமை. உங்கள் கம்பீரக்குரலாலும் இனிமையான தோற்றத்தாலும் மிடுக்கான தமிழாலும் எல்லோரையும் கவர்ந்தீர்கள்...நன்று
ReplyDelete