Friday, October 25, 2013

பெண்களும் சும்மாவும்

சும்மாவே இருப்பதில்லை
இந்தப் பெண்கள்
பொங்கல் வேலை
புத்தாண்டு வேலை
தீபாவளி வேலை
அமாவாசை வேலை
பூஜை வேலை
என்று 12 மாதங்களிலும்
பல வேலைகள் வைத்துக் கொள்கிறார்கள்
அவர்களைப்பற்றிய
எந்த நினைவும் இல்லாமல்
இதுவல்லாமல் அன்றாட
வேலைக்கான்
சமையல்,துவையல்,துலக்குதல்
பெருக்குதல்,கழுவுதல் வேறு
ஆனால்
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால்
வீட்டில்
சும்மா தான் இருக்கிறேன்
என்கிறார்கள்


4 comments:

  1. அருமையான, அழுத்தமான விஷயம்
    ஆனால் வழவழவென்று எழுதுகிறீர்கள்.
    25ஆண்டுகளுக்கு முன்பே இதை நாங்கள் “கண்ணுக்குத் தெரியாத நெருப்பு” என்னும தலைப்பில் நாடகமாகப் போட்டோம்.
    “சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்குவதுதான் கவிதை” என்பதை செயல்படுத்துங்கள்.
    வார்த்தைகளில் சிக்கனம்தான் நினைவில் நிற்கும்.
    நல்லகவிதை நம்மோடு ஒரு ஞாபக யுத்தம் செய்யும் என்று கவிஞர் பாலா சொன்னது அர்த்த பூர்வமானது அல்லவா கவிஞரே?

    ReplyDelete
  2. தெரிய வில்லை ஐயா.... எனக்குத்தோன்றுவதை எழுதுகிறேன்.... நீங்கள் என் வழிகாட்டி..... அவ்வப்போது இது போல் குட்டுங்கள்... சரியாவேன்.... நனறி அய்யா...

    ReplyDelete