Thursday, October 24, 2013

முகங்கள்

தங்களுக்குத்தாங்களே
வேறு பட்டுக் கொள்கிறார்கள்!
ஒருவருக்கு ஒருவர்
ஒற்றுமையாய் இல்லை
ஒருவரிடத்தில் மற்றொருவர்
அன்பு காட்டுகிறவர் இல்லை
தானே அனைத்து வேலையும்
செய்வது போல் காண்பிப்பவர்
ஒரு வேலையும் செய்ததாய் தெரியவில்லை
நான் பலவாறு
கணித்த நபர்கள்
வேறு மாதிரி இருக்கிறார்கள்
வேறு மாதிரி இருப்பார்களோ
என அச்சப்பட்டவர்கள்
நல்ல மாதிரி இருக்கிறார்கள்
நல்லவர்கள் என்று நான்
நம்பியவர்கள்
மிகப் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள்
பொல்லாதவர்களோ
பொறுப்பாய் இருக்கிறார்கள்
மனிதர்களை
ஆழ்ந்து பார்க்கும் போது
ஒரு முகமும்
நுணுக்கமாக ப் பார்க்கும் போது
ஒரு முகமும்
பழகும் போது
ஒரு முகமும்
எனப் பல முகங்களை
வெளிப்படுத்துகிறார்கள்
ஆச்சரியம் என்னவென்றால்
அந்த ஒரு முகம்
ஒரு முகமாகவே இல்லை
அதுவும் பல முகங்களாக
மாறுகின்றன
சில
 மாற்றப்படுகின்றன
சில
மாறி கொள்கின்றனர்
சில மாறியது போல் நடிக்கின்றனர்
சில
மாறாதது போல் வலம் வருகின்றன
எத்தனை முகங்கள்
எத்தனை மனங்கள்
எல்லாவற்றிலிருந்தும்
நீந்தி,நீராடி,போராடி,
வழிந்து வெற்றியாகி
வருவதற்குள்
அடேயப்பா
என் வாழ்வின்
பல ஆண்டுகள்
பறந்து விட்டன
முகங்களைப் புரிந்து கொள்ளாமலேயே!
***********************************************

1 comment: