Friday, October 11, 2013

உலகே பூச்செண்டு

பெருமை படைத்த
              பெண்ணே நீயும்
    வாழ்க நூற்றாண்டு- உனைச்
               சிறுமைப் படுத்தும்
               சில்லறைத்தனங்களின்
                சிறகினை ஒடித்து விடு.



எண்ணம் எல்லாம்
              ஏற்றம் கொண்டு
 எழுக கோல்கொண்டு- உன்

              தண்மை கொண்டு
               தழைக்கச் செய்வாய்
               உலகே பூச்செண்டு

பெண்மை என்றும்
               பெருந்தவம் என்றே
இன்றே பதிந்து விடு- உன்
               கண்மை கொண்டே
                கயமை அழிப்பாய்
                காற்றின் துணை கொண்டு




கற்றலில் அதிகம்
              கவனம் செலுத்தி
கால்கள் வளர்த்துக் கொள்-இனி
              நெற்று களாகி
                நினைவும் பலிக்கும்
                நேர்மை சேர்த்துக்கொள்





வானம் வரைக்கும்
               வளை கரம் நீட்டி
  வளமை நிறைத்துக் கொள் - மடத்
               தேனில் குழைத்த
                 தீப்பொய் வார்த்தை
                  தெருவே புதைத்து விடு



குடத்துக்குள்ளே
               அடைந்தது போதும்
கனவை மறைத்துக் கொண்டு -அட
                மடமை செய்யும்
                தடைகள் அகற்று
                தடையே மலர்த்தண்டு

****************************************

3 comments:

  1. பெண்ணே வாழ்க

    ReplyDelete
  2. நண்பர்கள் வட்டம், தமிழ்மணம் இணைப்பு படித்தவர் எண்ணிக்கை எல்லாம் எங்கே? இணையுங்கள் விரைவில்... அப்போதுதான் கவிதைகள் மற்றவர் கண்களில் படும். அதுவரை “மறைவாக நமக்குள்ளே புதுக்கவிதை சொல்வதிலும் மகிமையில்லை” க விஞரே!

    ReplyDelete
    Replies
    1. போங்கய்யா.....நானெ ஒண்ணுமே தெரியாம ஏதோ டைப் பண்றேன். தயவு செய்து திருப்பியும் கிளாஸ் வைங்களேன்.

      Delete