Tuesday, September 29, 2015

தமிழின் திறமை

தமிழின் திறமை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை



தமிழின் திறமை
*********************

வட்டில் தரும் பொட்டில் தமிழ்
முட்டும் இளம் கவிகள்--சொற்
கட்டில் நிலை மெட்டில் சுவை
கொட்டும் மன அலைகள்

சுற்றும் புகழ் பற்றும் தினம்
சொட்டும் புவி மனதில்--திணை
மொத்தம் நிகர் சித்தம்--அதில்
கொத்தும் மலர்க் கணைகள்

கள்ளும் பல சொல்லும் மது
அள்ளும் கவி மழையில்--அன்
புள்ளம் கலை வண்ணம்--கதிர்
கொஞ்சும் சுடர் இழையில்

திட்டம் பல கட்டும் இனி
பட்டம் பெறும் தமிழில் சொற்
குற்றம் தரும் ஏட்டில்--கனம்
செப்பும் தளிர் பாட்டில்

நித்தம் ஒரு சத்தம் உலை
கத்தும் வனக்குயிலில்--அதில்
பட்டும் நிலை கெட்டும் --தமிழ்
கொட்டும் கதிர் ஒளியில்

நெருப்பும் துறுவெறுப்பில்--மனம்
விரு(ம்)ப்பும் தனிப் புலமை--ஒரு
திருப்பம் இது முறிப்பம் எனில்
தகிக்கும் தன் திறமை.
**************************************************8

No comments:

Post a Comment