Friday, October 17, 2014

தமிழனின் வெற்றி

இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கண்ணதாசன் நினைவு நாள் மற்றும் சண்முகம் செட்டியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர் சுவாதி வரவேற்றார். மாணவிகள் கண்ணதாசனின் சில பாடல்களுக்கு நடனம் ஆடினர். கண்ணதாசனின் சில புத்தகங்களின் பெயர்கள் மட்டும் தலைப்புகள் கேட்கப்பட்டது. கண்ணதாசனைப்பற்றி மனோஜா சிறிய உரை ஆற்றினாள். தலைமை ஆசிரியர் தன் உரையில் சண்முகம் செட்டியார் பற்றி கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் திரு சண்முகம் செட்டியார் என்றும் நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் ., நீதிக் கட்சியிலிருந்து மாகாண சட்ட மேலவை உறுப்பினராகி சுயராஜ்ஜியக் கட்சி மூலம் மத்திய சபை உறுப்பினர் ஆனார். இவர் தயாரித்த நிதி அறிக்கையை அனைவரும் பாராட்டினார்கள். இவர் காங்கிரஸ் அல்லாதவர் என்றாலும் அவர்கள் இவரை

மதிக்கும் படி நடந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கம், லண்டன் தமிழ் சங்கம் போன்றவற்றை தோற்றுவித்தார். மகாத்மா காந்தி, தாகூர், அன்னிபெசண்ட், அறிஞர் அண்ணா, போன்ற பலருடனும் நட்பு பாராட்டி வந்தார். இவர் போல தமிழராய் பிறந்து அனைத்து மாகாணமும் போற்றும் வகையில் தன் திறமையையும் மேம்படுத்திக் கொண்டதோடு தமிழர்கள் இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். இது போன்ற மேதைகளின் வாழ்வை நாம் ஒரு படிப்பினையாக ஏற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்று தன் உரையில் கூறினார். சரஸ்வதிநாகராஜன் நன்றியுரை ஆற்றினார். 

2 comments:

  1. இனிய விழா அறிந்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  2. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களுடன் அமைந்துள்ளது உங்கள் பதிவு. சண்முகம் செட்டியார், கோவையில் பஞ்சாலைத் தொழில் முன்னேற்றம் அடைவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர். கோவையில் அமைந்துள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க கட்டடத்துக்கு கூட, அவரது பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete