இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களை உற்சாகமாய் வரவேற்ற தலைமை ஆசிரியர் சுவாதி தன் உரையில் பட்டாசுகளால் குருவி ,வண்டு, பூச்சியினங்கள் போன்ற பல உயிரினங்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாகப் போனது.விவசாய நிலங்களில் கந்தகம் என்ற அந்த வேதிப் பொருட்கள் பட பட உடல் நல்ம் குன்றுவதோடு மனநலமும் பாதிக்கப்படும் எனவெ நாம் விழிப்புணர்வு கொள்வோம் ,மேலும் இதனால் குழந்தைக் தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர். இதெல்லாம் தவிர்க்க முதலில் நாம் பட்டாசுகளைத் தவிர்ப்பதோடு நம்மோடு பேசும், தொடர்பில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதனைத் தெரிவித்தால் அவர்களும் மாற வாய்ப்பு இருக்கிறது. அரும்பாடு பட்டு வரும் பணத்தை தயவுசெய்து பட்டாசுகளில் செலவிடாமல் உபயோகமான பொருட்களில், செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கல்வியாளர் சரஸ்வதி நாகராஜன் கூறுகையில் பட்டாசுகளால் நமக்குக் செலவு மிச்சம் என்பதோடு பதைபதைப்போடு இருக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும் என்று கூறினார்.பட்டாசுகள் தவிர்த்த தீபாவளியைக் கொண்டாடப்போவதாகவும் ,பட்டாசுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதோடு இனி தன் வாழ்நாளில் பட்டாசுகளே வாங்கப்போவதில்லை என இரு கைகளில் அடித்து சத்தியம் செய்தனர். மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தீபாவளி சார்ந்த திரையிசைப் பாடல்களை மாணவர்கள் பாடியும் ஆடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். தலைமை ஆசிரியர் சுவாதிக்கு தன் கைப்பட எழுதிய வாழ்த்து மடல்களைக் கொடுத்து கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்து தங்கள் மகிழ்வினைத் தெரிவித்துக் கொண்டனர்.மாணவியர் தலைவி மனோஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்>
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete