Friday, August 15, 2014

நூல் வெளியீட்டு விழா செய்திகள்





ஆகஸ்டு 15ம் தேதி   “நிலவோடு பேசும் நேரம்” என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வை நா.முத்துநிலவன் அவர்கள் தலைமை தாங்க முதல் நூலை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட்டார்.ரோட்டரி சங்கத்தின் ஜெய் பார்த்தீபன் முதல் நூல் பெற்றுக் கொண்டார். ரமாராமநாதன், சு.மதியழகன், எஸ்.இளங்கோ, நடனம், வாழ்த்துரை வழங்கினார்கள்..கறம்பக்குடி த.மு.எ.க.ச ஸ்டாலின் நூல் விமர்சமன் செய்தார். கம்பன் கழகம் இரா.சம்பத்குமார் நூல் அறிமுகம் செய்தார் . சக்தி வரவேற்புரை வழங்க ராகசூர்யா நன்றியுரை ஆற்ற சுவாதி ஏற்புரை வழங்கினார். விழாவில் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் சங்கர், மகளிர் ரோட்டரிசங்கத் தலைவி அருணோதயம், சத்தியராம் ஜுவல்லரி ராமுக்கண்ணு, பாவலர் பொன்க, மகா.சுந்தர், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி,செம்பை மணவாளன் , கஸ்தூரிநாதன்,சுரேஷ்மான்யா,பி.எஸ்.கே, போன்றோர் கலந்து கொண்டனர்

7 comments:

  1. வணக்கம்
    நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது மிக்க மகிழ்ச்சி இன்னு பல நூல்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வாழ்க, வளமுடன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தங்களின் நூல்வெளியீட்டு விழா நடைபெற்ற அதே நேரத்தில், கரந்தையில் ஒரு சங்கம விழா நடைபெற்றது சகோதரியாரே
    நான் படித்த, பணியாற்றுகின்ற பள்ளியில்,1982 முதல் 1986 வரை படித்த மாணவர்கள், மற்றும் அக்காலத்தில் பணியாற்றி ய ஆசிரியர்களின் சங்கம விழா நடைபெற்றது. இது ஓர் புது முயற்சி. சுமார் 40 மாணவ்ர்களும், 20ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இருக்க வேண்டியதால்தான், தங்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர இயலாமல் போய்விட்டது. பொறுத்தருளவும். தங்களின் நூலினை படிக்க ஆவலாய் உள்ளேன். எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவிக்க அன்போடு வேண்டுகிறேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. வாழ்க, வளமுடன்

    ReplyDelete
  5. வாழ்க, வளமுடன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள சகோதரி
    எனது தாயாரின் சகோதரர் காலமானதால் கலந்துகொள்ளும் பேறு வாய்க்கவில்லை

    ReplyDelete
  7. 'நா.முத்துநிலவன் அவர்கள் தலைமை தாங்க முதல் நூலை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட்டார்.ரோட்டரி சங்கத்தின் ஜெய் பார்த்தீபன் முதல் நூல் பெற்றுக் கொண்டார்' அழைப்பிதழில் இருந்த நிகழ்வு மாறிவிட்டதா? சொல்லவே இல்ல!!!!!

    ReplyDelete