இன்று தலைமை ஆசிரியர் கூட்டத்தில் எங்கள் பள்ளியைப் பற்றியும் என்னைப் பற்றியும் எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு ஜேம்ஸ் அவர்கள் மிகவும் பெருமையாக கூறி ஒரு பெரிய பாராட்டுதலைத் தந்து அனைவரையும் கைதட்டச் சொல்லி மகிழ்ந்தார். உரிய பாராட்டுக்குரியவரை பாராட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் அவர் சிறந்தவர். அவர் பாராட்டை கேட்டு ஒரு சிறு குழந்தை போல்மகிழ்ந்தேன். அவரின் ஊக்க வார்த்தைகள் என்னை மகிழ வைத்ததோடு மேலும் என் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டேன்.அவருக்கு என் நன்றிகள்.இன்று உண்மையிலேயே என் பணிக்கு அங்கீகாரமும் ஊக்குவிப்பும் கிடைத்த நாள்..
என் பணி சிறக்க உதவிய ,எங்கள் கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திருமிகு அருள் அவர்களுக்கும் என் பணிவான அன்பான நன்றி.
வெளியில் வந்ததும் என் கை பிடித்து வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், மேலும் வாழ்த்து கூறிய அனைத்து ஆண் தலைமை ஆசிரியர்களுக்கும் என் நன்றி...
இந்தப் பாராட்டை வாங்க உதவிய எங்கள் பள்ளி உதவிஆசிரியர் திருமதி ஜெகஜோதி அவர்களுக்கும் திருமதி சரஸ்வதி அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக...
என்பணிகளை தொடர்ந்து பாராட்டி வரும் எங்கள் பஞ்சாயத்துத்தலைவர் திருசேதுராமன் அவர்களுக்கும் ,பெற்றோர்சங்கத்தலைவர்,மற்றும் கிராமக்கல்விக்குழுத்தலைவர் என் இனிய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாராட்டினார் என்று சொல்வதை விட எதற்காக எதை செய்ததால் என்பதை சொன்னால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத அனைவரும் தெரிந்து உங்களை மேலும் பாராட்ட வழி வகுக்குமே
ReplyDeleteபாராட்டுக்கள் தலைமையாரியர் உங்களை பாராட்டியதற்காகத்தான் இந்த பாராட்டு. அவர் எதற்கு பாராட்டினார் என்று சொன்னால் மேலும் அதிகப் பாராட்டுக்கள் கிடைக்கும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
எங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும்
ReplyDeleteபகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்