Friday, July 25, 2014

அணிந்துரை

எனது நேசச்சுடர் என்ற நூலுக்கு கவியரசர் இளந்தேவன் அளித்த அணிந்துரை
*********************************************************************************
   சோற்றுக்குப் பிறந்தவர்கள் மனிதர்கள் என்றால் காற்றுக்குப் பிறந்தவர்கள் கவிஞர்கள், காற்றுக்குத் தேக வர்ம்பில்லை

சுவாதீ எங்கோ பிறந்த இளங்குயில் அம்மா எலிசபெத் தாமஸ் கருணை வானத்தின் கருப்பு நிலா

குயில் நிலவைப் பாடிய குதூகாலம் தான் “நேசச்சுடர்” என்னும் பெயரில் வெளிப்பட்டிருக்கிறது.

எங்கேயும் நன்மை விளையலாம் என்றால் எவரும் அதைப்பாடலாம் . அப்படி ஒரு சென்னை நகரச் செம்பியன் மாதேவியை, கூவத்துக்கும் புதுகைக் குயில் பாடிப்பரவ எடுத்த முயற்சிதான் நேசச்சுடர்.

அம்மா சரஸ்வதிக்காஅய், அடையாறு ஆலமரத்துக்குப் பின் ந்ழுந்த அதிசய ஆலமரம் அதைப் பார்த்த பரவசத்தில் கூவிய குயில்கள் ஏராளம்.

அடையா நெடுங் கதவும்
அஞ்சல் என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்


என்பார்களே, அதைப்போல அந்தத் தர்மத்தாயிம் தாழ்வாரத்தில் இலக்கியவாதிகளை எப்போதும் பார்க்கலாம்.

அந்த இலக்கிய வானம்பாடிகளில் புதிதாக ‘ஞானஸ்நானம்” பெற்றிருக்கும் புதுகைக் குயிலே சுவாதீ

ஒற்றை வரியே கவித்துவத்தின் முகவரியாக உலாவர முடியும் சுவாதீ அம்மாவைப் பற்றி எழுதிய வரிகளில் முகம் காட்டுகிற முழுக்கவிதை வரி ”முள்ளிலும் முத்தமிழ் பூக்கும் முகம்” என்னும் வரியாகும்.

“முத்தமிழ் பூக்கும் முகம்” என்பது எத்தனை பொருத்தம்?

முள்ளிலும் முத்தமிழ் பூக்கும் முகம் என்பது கற்பனையின் உச்சம்....என்று பிறர் கருதலாம் என்னைப் பொறுத்தவரை, முள்ளிலும் என்பது அம்மா இருக்கும் சூழலைப் பற்றிச் சுவாதீ சொன்ன சுமூக வார்த்தையாகவே தென்படுகிறது.

அம்மாவின் செயலாற்றல் அங்கிருந்து காணப்பட வேண்டிய ஒன்று. அதைச் சுவாதீ பார்த்தது எப்படி? இதோ இப்படி:

சரியெனப்பட்டதைச் சட்டெனச் செய்திடும்
சரித்திர தீபம் நீயே”

அம்மாவின் கனிவு எப்படி வார்த்தை வலையில் அகப்படாதோ, அப்படியே அவரது துணிவும் எழுத்துப் பிடிகளுக்குள் அகப்பட்டதில்லை.

எனவே, உலகளாவிய வீரமகளிரின் பட்டியலைத் தந்து அம்மாவை அந்த வரலாற்று நாயகிகளின் வரிசையில் வைத்துக் காட்டியிருக்கிறார் சுவாதீ

அம்மாவின் ஈரநெஞ்சத்துக்கு இணையிலாச் சான்று, வீரக் கவிஞன் விசயரங்கன். அவனுக்கு உரிய இடம் உயரிய இடம் என்று தீர்மானித்து, நான் அறிமுகப்படுத்திய அளவிலே அதைச் செயல்படுத்திக் காட்டிய “செந்த்ண்மை” அம்மாவுக்கே உரியது.

இதைச் சுவாதீ சொல்லுகிற இடம் கருவிழிகளின் கடைகோடிகளைக் பனிக்க வைப்பது.

கண்மலர் இல்லாத கவிஞானம் ரங்கனும்
கண்டு நீ வாழ்வு தந்தாய்

இந்த வரி அம்மாவின் வற்றாத கருணையின் வரலாற்றுப் பதிவு.

“ஆசை பற்றி அறையலுற்றேன்” என்பான் தேரழுந்தூர்க்காரன். சுவாதீயின் ஆசை என்ன?

மற்றுமோர் பிறவியில்
மங்கை உன் மகளுமாய்
மாது நான் பிறக்க வேண்டும்

அந்த ஆண்டாளுக்கு அரங்கனை அடைய ஆசை. இந்த ஆண்டாளுக்கு எங்கள் வைணவத் தாயின் மகளாகப் பிறக்க ஆசை.

நேசச்சுடர்’ எனும் வாசத் தலைப்பை ஏந்தி வருகிற இந்தப் பனுவல், பாடுபொருளால், சிறப்புற்ற பாட்டுத் தொகுப்பென்க.

பாடிய சுவாதீயும், பாட்டுடைத் தலைவியும் பாராட்டுக்குரியவர்கள்

அம்மாவின் மணிவிழாப் பொழுதில் எழுந்த இந்தநேசச் சுடர், திசைகளுக்கு வெளிச்சம் வழங்குவதாக.

ஏசுவுக்கு அப்போஸ்தலர்கள் பலர், எங்கள் அம்மாவுக்கு அப்போஸ்தகர் ஒருவர் தான். பெயர் கொடைக்கானல் காந்தி. நேசச்சுடர் எங்கள் கொடைக்கானல் காந்தி

அவருக்கும் சத்தமில்லாமல் மனசுக்குள் நுழைந்து விடுகிற சங்கீதக் கண்ணன் கோவி.கண்ணனுக்கும், இந்த நூல் முயற்சியுல் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக என் பாராட்டு

அம்மா ஆயிரங்காலத்துப் பயிர் சுவாதீயும் அந்த வகையில் அம்மாவின் மகளாக வாழ என் வாழ்த்துக்கள்

இன்ப அன்புடன்
இளந்தேவன்
28.04.95
அரசினர் தோட்டம்
சென்னை2






5 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. நேசச்சுடர் ஒளிவீசிப் பிரகாசிக்கட்டும்.!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்
    படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்
    எங்கு கிடைக்கும் என்பதைத் தெரியப் படுத்துங்கள்
    மீண்டும் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  4. இளந்தேவனின் அணிந்துரை இளந்தென்றலாய் மனதை தொட்டது !
    த ம 1

    ReplyDelete