Wednesday, July 2, 2014

நன் கொடை( நன்றல்லாத கொடை மாத கடைசியில் மட்டும்)

அலுவலக நாட்களில்
ஆளுக்கொரு முறை
 வந்து விடுகிறார்கள்
கூழ் ஊத்தப் போறோம்
காவடி எடுக்கப் போறோம் என்று

ஒவ்வொரு ஞாயிறும்
ஒருவராவது
 வந்து விடுகின்றனர் வீட்டுக்கு
நோட்டு ஏந்திக்கொண்டு
மகளுக்குத் திருமணம்,
பெரியவருக்குச் சிகிச்சை என்று

கடைகளில் தொங்கும்
பத்திரிக்கைகளில்
 எங்கேனும்
வந்துவிடுகிறது
 ஒரு விளம்பரம்
இதய அறுவை சிகிச்சைக்கு
பணம் அனுப்ப வேண்டிய முகவரி என்று

பேருந்து நிறுத்தங்களில்
சின்னக் குடத்தில்
மஞ்சள் துணி கட்டி
வந்து விடுகிறார்கள்
அலகு குத்திக் கொண்டோ
வேப்பிலை வைத்துக் கொண்டோ
பழனி பாத யாத்திரை
ஆதிபராசக்தி பாதயாத்திரை என்று

புரட்டாசியும் மார்கழியும்
வெங்கட்ராமா கோவிந்தா

ஆடியும் தையும்
மாரியம்மனுக்கு அரோகரா
ஐயப்பா, ஓம்முருகா என்று
மாதங்கள் தோறும்

இதெல்லாம் போக
உறவினர் திருமணம்
உற்ற நண்பர்கள் திருமணம்

பூப்பு நீராட்டு விழா
புதுமனை புகுவிழா
காது குத்து, வளைகாப்பு என்று
ஏகப்பட்ட அழைப்புகள்
அதையும் மீறி
மறைந்த நடிகர்
மறைந்த தலைவர்
உயிரோடு இருக்கும் பிரமுகர்கள்
பிறந்த நாள், நினைவுநாள்
கொண்டாட
வசூல் வேட்டை

தொழிலதிபர்கள்
கருப்புப் பணத்தை
வெள்ளையாக்கத் திண்டாடுகிறார்கள்

நடிகர்கள் சிலர்
தொழில்வரி கட்டாமல்
தொகையை அமுக்கி விட்டனர்

சித்திரை முதல் பங்குனி வரை
ஜனவரி முதல் டிசம்பர் வரை
சிகிச்சை என்றோ
திருமணம் என்றோ
காரணம் கண்டு பிடித்திருக்கிறார்கள்
அன்பளிப்பு வாங்க என்று

அரசியல் தலைவர்கள்
பாதிபேருக்கு
அரசாங்க வங்கியில்
கோடிக்கணக்கில் கடன்

எல்லாவறரியும்
எல்லோருக்கும் கொடுத்த அரசாங்கம்
நடுத்தர வர்க்கத்து
அரசு ஊழியர்களிடம்
வரியை ப் பிடிங்கிக்கொள்கிறது

பிச்சைகள் பலவிதம்
பிழைப்புகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
************************************************

5 comments:

  1. நன்றாகச் சொன்னீர் சகோதரியாரே
    பிச்சைகள் பலவிதம்தான்
    தம 1

    ReplyDelete
  2. நன்றல்லாத கொடையைக் கொண்டு நல்ல கவிதை வந்திருக்கிறது எனில் அது நன்கொடைதான்!
    வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete
  3. ///பிச்சைகள் பலவிதம்
    பிழைப்புகள் பலவிதம்
    ஒவ்வொன்றும் ஒருவிதம்//

    உண்மைதான்
    படிக்க சுவையாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றல்லாத நன்கொடைகள்.....
    நல்ல கொள்ளைகள்..

    ReplyDelete
  5. தவிர்க்கமுடியாமல் தவணையில்
    கொடுத்துக் கொடுத்ததே நாம்
    ஓட்டாண்டி ஆகிவிடோம் போலத்தான்
    உள்ளது
    யதார்த்த நிலை சொல்லும் அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete