ஒவ்வொரு இடத்திலும்
எனக்கு ஒரு முகம்
கலகலக்க வைப்பாள்
என்பாள் என் பள்ளித் தோழி
என்னைப்பற்றி!
மைக்கில் மட்டுமே பேசுவாள்
மனிதர்களோடு பேசமாட்டாள்
என்பாள் என் அலுவலகத்தோழி
என்னைப்பற்றி
எப்போதாவதுதான் சிரிப்பாள்
சண்டைகாரியும் இல்லை
வம்புக்காரியும் இல்லை
என்பாள் என் பக்கத்து வீட்டுக்காரி
என்னைப்பற்றி
எதுக்கெடுத்தாலும் அடம் செய்வாள்
சமாதானக்காரி இல்லை
என்பாள் என் அம்மா
என்னைப்பற்றி
எதுவும் சொல்லமாட்டாள்
எதற்கும் ஒரு புன்சிரிப்போடு பேசுவாள்
அழுத்தக்காரி என்பாள்
என் மாமியார்
என்னைப்பற்றி
தடாலடியாக முடிவெடுப்பாள்
வேகமாக வேலை செய்வாள்
எப்போதும் கோபக்காரிதான்
என்பார் என் கணவர்
என்னைப்பற்றி
பேசுவாள் சிரிப்பாள்
சொல்லிக்கொடுப்பாள்
நட்பு காட்டுவாள்
அன்புமுகம்
தேவதை மாதிரி
என்பாள் என் மகள்
என்னைப்பற்றி
******************************************************************
எனக்கு ஒரு முகம்
கலகலக்க வைப்பாள்
என்பாள் என் பள்ளித் தோழி
என்னைப்பற்றி!
மைக்கில் மட்டுமே பேசுவாள்
மனிதர்களோடு பேசமாட்டாள்
என்பாள் என் அலுவலகத்தோழி
என்னைப்பற்றி
எப்போதாவதுதான் சிரிப்பாள்
சண்டைகாரியும் இல்லை
வம்புக்காரியும் இல்லை
என்பாள் என் பக்கத்து வீட்டுக்காரி
என்னைப்பற்றி
எதுக்கெடுத்தாலும் அடம் செய்வாள்
சமாதானக்காரி இல்லை
என்பாள் என் அம்மா
என்னைப்பற்றி
எதுவும் சொல்லமாட்டாள்
எதற்கும் ஒரு புன்சிரிப்போடு பேசுவாள்
அழுத்தக்காரி என்பாள்
என் மாமியார்
என்னைப்பற்றி
தடாலடியாக முடிவெடுப்பாள்
வேகமாக வேலை செய்வாள்
எப்போதும் கோபக்காரிதான்
என்பார் என் கணவர்
என்னைப்பற்றி
பேசுவாள் சிரிப்பாள்
சொல்லிக்கொடுப்பாள்
நட்பு காட்டுவாள்
அன்புமுகம்
தேவதை மாதிரி
என்பாள் என் மகள்
என்னைப்பற்றி
******************************************************************
முகத்தில் குணம் காணலாம்...
ReplyDeleteபல முகங்களோடுதான் இன்று நடமாட வேண்டியுள்ளது அல்லவா?
ReplyDeleteதங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteபள்ளித்தோழியைப் பற்றிய நல்ல பகிர்வு. ரசிக்கும்படி இருந்தது.
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteபகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்