Saturday, June 7, 2014

பகிர்ந்து கொள்ள....முக்கியமானது.




  இன்று அதிகாலை 4.30 மணிக்குப் பெரியார் நகடில் வசிக்கும் என் தோழியின் வீட்டிற்கு அவளுடைய ஹவுஸ் ஓனர்வந்திருக்கிறார். (ஐய்யய்யோ.... வீட்டுக்காரர்னு சொல்ல முடியாத படிக்கு இந்த வார்த்தைச் சிக்கல் வேறு)  (ஹவுஸ் ஓனர் என்று நான் விளிப்பதால் தமிழ் கூறும்  நல்லுலகம் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)

ஒரு தனியார் நிறுவனத்தில் மிகவும் குறைந்த கூலிக்கு வேலை பார்க்கிறாள். (அவள் வாங்குவதை சம்பளம் என்றோ ஊதியம் என்றோ உயர்த்திக் கூற்வதை என்மனம் மறுக்கிறது) அவள் கணவரும் தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிகிறார்.

 அவளைப் பற்றி...முன் குறிப்பு
********************************

1..பெளர்ணமி காலங்களீல் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி நிலா பார்க்கச் சொல்வாள். அவள் வீட்டு மொட்டை மாடியில் நின்றால் என் வீடு தெரியுமாதலால் நானும் மாடிக்கு வந்து விட்டேனா என்று உறுதி செய்து கொள்ள அங்கிருந்து இரண்டு கைகளையும் உயர்த்தி ஆட்டுவாள். தன் மகிழ்வைத் தெரிவிக்க வல்க்கையால் வாயைப்பொத்தி தோளைக் குறுக்கி சிரிப்பது போல் ஜாடை காட்டுவாள். ( நான் மாடிக்கு வந்தது அவுகளுக்கு சந்தோஷமாமாம்)

2.. ஒருமுறை மின் வாரியத்திலிருந்து வந்தவர்களால் அவள் வீட்டு வாசலில் இருந்த் வேப்பமரத்தின் ஒரு பகுதியை வெட்ட நேர்ந்த்து.அந்த சோகத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டினாள். ஒரு சில தினங்களீல் அவளுடைய தீவிர கவனிப்பினால், அது துளிர் விடுவதை வந்து பார்த்தபின் பள்ளிக்குப் போகலாம் என்று கட்டாயப் படுத்தினாள்.

3..போன வாரம் பெய்த காற்றுடன் கூடிய கனத்த மழையில் பெரியார் நகரில் பல மரங்கள் சரிந்து விழ மறுநாள் தன் வாக்கிங் நேரத்தில் ( என் வாக்கிங் நேரத்திலும் தான் ) அம்மா போலவே பார்த்தாயா? பார்த்தாயா? என்று கேட்டுக் கொண்டே இருந்தவள்.

4..எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் திரு கஸ்தூரிரெங்கன் தன் முகப்புத்தகத்தில் மரங்கள் சாய்ந்ததைப் பற்றி வருத்தமாக எழுதியிருந்தாராம்.அடடா அடடா என்று பாராட்டிக் கொண்டே இருந்தவள்.

5..குறிப்பாக தன் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குபவர் . அவள் மாமியார் இவளைப் பார்த்து “கட்டு சிட்டா” குடும்பம் நடத்துபவள் என்று அடிக்கடி கூறுவாள். ( அதென்ன ’கட்டு சிட்டு ‘ தமிழ் கூறும் நல்லுலகமே இதற்கு விடைதா.)
   மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்று ஏதேனும் கோனார் நோட்ஸ் போல ஒரு சுந்தரி நோட்ஸ் போட்டால் செம கலெக்‌ஷனாகும் ல?)


6.. நானே போகாத கணினி பயிற்சியைப் பற்றி அங்கு என்னெல்லாம் நடந்திருக்கும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்தவள்.( எங்கள் ஊரில் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களால் வலை தளம் தொடங்குவதும் பராமரிப்பதற்கான பயிற்சிகள் வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடத்தப் பட்டது. )

7.. நம்மாழ்வார் அய்யாவை நேசிப்பவள்

8..நான் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன் என்பதால் எனக்கு எல்லாம் தெரியும் என்று நம்புபவள், அல்லது தெரிய வேண்டும் என்று நினைப்பவள்.

9.. எவ்வளவு உடல்நலம் குன்றி இருந்தாலும் வீட்டில் மட்டும் தான் சமைப்பவள். என் குழந்தைக்கான உணவை எந்த உணவகங்களும் தர முடியாது என்று உறுதியாய் நம்புபவள்.

10.. வியாழன் அன்று எது எப்படி இருந்தாலும் சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்பவள்.(பெண்களுக்கான நாட்களிலும் கூட) (அது எங்கள் தெருவின் அடுத்த தெருவில் தான் அந்த கோயில் உள்ளது)

11.. யாருக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும் போலியற்ற மனதுடன் அவர்களுக்காகப் பிரார்த்திப்பவள் .

12..அவளுக்கு ஒரே மகள். அவள் சிறிது மாதங்கள் முன்னர் தான் பூப்பெய்தி இருந்தாள். அவள் இதே நகரில் உள்ள ஒரு பிரபலப் பள்ளியில் படித்து வருகிறாள். அவளூக்காகத் தான் அவர்கள் இங்கு வந்ததே.

   இவளைப் பற்றி இது போதும் என்று நினைக்கிறேன்.

   மேமாதம் அவள் கணவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஒரு மாத விடுப்பு எடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. அதனால் அந்த மாத வருமானம் அவருக்கு இல்லை.

எனவே இவள் ஊதியம் கொஞ்சம் சேமிப்பு எல்லாம் சேர்த்து மகளுக்கான கல்விக்கட்டந்த்தை செலுத்தி விட்டு மீதன் இருந்த தொகையில் உணவுக்கான மளிகை, அரிசி, எண்ணெய்.போன்ற இன்றியமையாத பொருட்களை வாங்கிவிட்டாள். அதற்கு மட்டுமே பணம் இருந்திருக்கிறது. அதனால் இம்மாத வாடகையை அவள் செலுத்தவில்லை. ஆனால் அவள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்த மாதம் அனைவருக்குமே முன்பணம் கடனாகத் தருவார்களாம். அதனை வட்டியோடு சிறு தொகையாக மாத வருமானத்தில் திரும்பச் செலுத்தி விட வேண்டுமாம். இது போல் அனைவரும் கல்விக்கட்டண்ங்கள் கட்ட வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடாம். ( நல்ல வேளை! ஊதியத்திற்கு பதில் கூலி கொடுக்கும் முதலாலிக்கு இதுவேனும் தெரிகிறதே)

   அந்தக் கடன் 10ம் தேதி தான் வருமாம். வந்தபின்னே வாடகை செலுத்திக் கொள்ளலாம் என்று இருந்திருக்கிறாள். அவளுடைய ஹவுஸ் ஓனர் இருப்பது சென்னையில். எனவே அவள் வங்கியில் அவர்கள் கணக்கில் பிரதி மாதன் 1ம் தேதி இது வரை பணம் செலுத்தியிருக்கிறாள்.இம்மாதன் 7 தேதி வரை ஆகிவிட்டதாக் அந்த ஹவுஸ் ஓனர் இவள் வீட்டுக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்திருக்கிறார். கதவைத் தட்டி செல்போனில் அழைத்திருக்கிரார்.

 அவள் கணவர் கொஞ்சம் கூச்ச சுபாவமும் பயந்த சுபாவமும் கொண்டவர். எனவே, வாங்க, உட்காருங்க, என்று கூடத்தில் அமர வைத்திருக்கிறார். (அவர்கள் மூவரும் கூடத்தில் உறங்குவது தான் வழக்கமாம். ஏனெனில் இருக்கும் ஒரே அறையில் முக்கியமான பொருட்களை அடைத்து வைத்துள்ளனர்.

  அவள் மகள் வீட்டில் அரைக்கால் டவுசர் போடுவது தான் வழக்கம் .     (  பாவாடை சட்டை போடுவது தான் வழக்கொழிஞ்சு போச்சே) வயதிற்கு வந்த பெண் என்பதால் அடுத்தவர் வருகையின் போது அங்கு படுக்க வைப்பது நாகரிகம் இல்லை என்று எண்ணியும் அதுவும் அரைக்கால் டவுசரோடு அந்நியர் முன் படுக்கவைப்பது சங்கோஜமாக இருக்கும் என்ற நிலையில் எழுப்பி அடுத்த அறைக்குள் படுக்க வைத்துள்ளனர்.

   திடீரென்று எழுப்பியதாலும், மாற்றிப் படுக்கச் சொன்னாலும் தூக்கம் கலைந்து , இயல்பாகத் தூங்க இயலாமல் தவித்துப் போய் தலைவலி வேறு வந்துவிட்டதாம். எனவே அன்று காலை நடக்க இருக்கும் பள்ளியின் சிறப்பு வகுப்புக்கு அவளால் செல்ல இயலவில்லை.

என் தோ ழி தமிழ் மீது சற்று ஆர்வமுள்ளவள். எனவே நான் நடத்தும் த.மு.எ.க.ச. கூட்டத்திற்கும் எங்கள் முதன்மைக்கல்வி அலுவலரின் வீதி கூட்டத்திற்கும் நான் அழைத்தபோது அது ஞாயிறு என்பதால் இன்று எனக்கு இரட்டிப்பு சம்பளம் ( மன்னிக்க ...கூலி...) கிடைக்கும் என்பதால் ஆர்வமிருந்தும் வர இயலவில்லை என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வாள்.

   அதே சமயம் விடுப்பு எடுத்தால் ஊதியம் கழிக்கப் படுமாம். அந்த ஹவுஸ் ஓனர் வந்து 6 மணி வரை ஏன் வாடகை செலுத்த வில்லை. என்றும் எனக்குச் செக் கொடுங்கள் என்றும் கேட்டதோடு விடாமல், உங்களுக்கு உடல்நலமில்லாமல் இருந்ததற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? ஊதியம் வரவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 10ம்தேதி ப்ணம் வருன் என்ன ஆதாரம் காண்பியுங்கள்.நான் எப்படி நம்புவது? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்.

   வழக்கமாக 5 மணிக்கு  சமைத்து முடித்தால் தான் அவள் பேருந்து பிடித்துவேலைக்கு போகும் இடம் செல்ல சரியாக இருக்கும். 6 மணிவரை பேசிக்கொண்டிருந்ததால் குழந்தையும் சிறப்பு வகுப்பு 7 மணிக்கு போக வில்லை. இவளும்  அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். உறவுக்காரர் வீட்டுத் திருமணம் , சடங்கு, இறப்பு, என்று எந்தக் காரியமென்றாலும் மிகவும் திட்டமிட்டு ஒரு மணி நேர அனுமதி கேட்டு வேலைக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.

  ஆனால் இன்று ஏற்பட்ட மன உளைச்சலாலும் பணிச்சுமையினாலும் அவள் வேலைக்குப் போகவில்லை  .1/2 நாள் ஊதியத்தை அவள் இழந்தாள்.

இந்த ஹவுஸ் ஓனர் 4ம் தேதி தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அன்று அவள் அலுவலகத்தில் மேலதிகாரிகள் வந்திருந்ததனால் அவளால் அந்த அழைப்பை ஏற்க இயலவில்லை.மேலும் பெண்களுக்கு வீடு வந்தால் தான் வேலை தொடருமே....பாத்திரம் கழுவி, துணி துவைத்து. வீடு கூட்டி உணவு சமைத்து, மகளை கவனித்து என்று இத்தியாதி வேலைகளில் மீண்டும் இவளே தொடர்பு கொள்ளவில்லையாம். அதனை ஒரு குற்றச் சாட்டாக கூறியிருக்கிறார்.

என் இனியவர்களே... இந்த மனிதர்கள் ஹவுஸ் ஓனர்கள் தானே மன்னர்கள் இல்லையே. அவர்களிடம் குடியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வரலாமா? இது நியாயம் தானா?

எப்போது வந்தாலும் காப்பி போட்டுத் தர வேண்டுமாம். காப்பி சற்றே நீர்த்துப் பொய் இருந்தாலும் இரண்டு மடக்கு குடித்து விட்டு இவள் முன்னிலையிலேயே இப்படி நான் மட்டமாகக் குடிப்பதில்லையென சாக்கடையில் கொட்டுவாராம்( இதை அவள் வீட்டின் அடுத்த வீட்டில்  இருக்கும் மற்றொரு அம்மணி சொன்னது.)

 அவள் மகள் முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கிறாள். எனவே இந்தப் பகுதியில் இருந்தாக வேண்டிய கட்டாயம். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஏரியாவின் ஹவுஸ் ஓனர்கள் மிகவும் கடினமாகத் தான் நடந்து கொள்வதாகத்தான். பலரும் கூறுகிறார்கள்.

அவள் கணவன் அலுவலக நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்பவர். அதிகாலை அவர் இல்லாத சமயத்தில் ஒரு அந்நிய ஆடவன் வீட்டினுள் நுழைந்தால் பிறர் என்ன நினைப்பர்ர்கள். முதலில் கூட்டி வரும் அந்த ஆட்டோகாரரே என்ன நினைப்பார்?

எங்கள் பகுதியில் எல்லோரும் காலை நடைபயிற்சி போகிறவர்கள் என்ற காரணத்தால் எல்லோரும் பார்க்கும் படி இப்படி ஆனது அவளை பெருத்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பெண்களுக்கெதிராகத்தான் அதுவும் அழகிய பெண்களுக்கெதிராக தூற்றத் தான் ஆயிரம் வாய்கள் முளைத்து வருமே?

செய்வதறியாது என் தோழி திகைக்கிறாள். அவள் திடம் கொள்ளவும்  எல்லாத் துயரிலும் எதிர் கொண்டு எழவும் என்னோடு நீங்களும் பிரார்தியுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கட்டும்
******************************************************************************
பின்குறிப்பு:    மற்றவர் பின்பற்ற:
**********************************
இந்தக் கட்டுரை துவங்கும் போதே ஓம் கரந்தை ஜெயக்குமாராய நமக, ஓம் திண்டுக்கல் தனபாலனாய நமக.. ஓம் முத்துநிலவனாய நமக சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்தேன்,, ஏனெனில் மின்சாரத்தின் மீது அவ்ளோ பயம். ஏன் அவர்களுக்கு நமக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தான் எனக்கு வலைதளம் தொடங்குவது பற்றி கற்றுத் தந்தவர்கள். எனவே அவர்கள் நாமம் வாழ்க. அவர்கள் புகழ ஓங்குக. இவ்ளோ டைப் பண்ணின வரை மின்சாரம் போகலியே.
********************************************************************






10 comments:

  1. சில அனுபவங்கள் கொடுமையானவை, வேதனையானவை. தங்கள் தோழிக்கு பிரச்னைகள் தீரவும், நல்வாழ்வு அமையவும் இறையருள் கைகூடும். ஒரு வேதனையைப் பகிரும்போதே அதன் தாக்கம் குறையும். அவ்வாறே தங்களின் பதிவு மூலமாக அவருடைய சோதனைகள் விரைவில் குறையும், பின் மறையும்.

    ReplyDelete
  2. கஷ்டமாகத்தான் இருக்கிறது! உங்கள் தோழி விரைவில் மீண்டு வரட்டும்! அதே சமயம் வேறு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்கு முயற்சி செய்ய சொல்லுங்களேன்! நன்றி!

    ReplyDelete
  3. ///இந்தக் கட்டுரை துவங்கும் போதே ஓம் கரந்தை ஜெயக்குமாராய நமக, ஓம் திண்டுக்கல் தனபாலனாய நமக.. ஓம் முத்துநிலவனாய நமக சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்தேன்,, ///
    அயராது பாடுபட்டு பயிற்சிப் பட்டறை நடத்தியவர் திரு முத்து நிலவன் ஐயா
    திண்டுக்கல்லில் இருந்து வந்த வழிகாட்டியவர் திண்டுக்கல் தனபாலன்
    தஞ்சையில் இருந்து வந்திருந்து வேடிக்கைப் பார்த்தவன் நான்
    எனக்கும் நமகவா?
    தங்கள் அன்பில் மெய்சிலிர்த்துப் போனேன் சகோதரியாரே
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
  4. //நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
    தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே//
    என்று பெண்மையைப் போற்றுவான் பாரதிதாசன்,
    தங்கள் தோழிக்கு வார்த்தைகளால் வலு சேருங்கள்
    வஞ்சக மனத்தினரை தூக்கி எறியும் மனத்துணிவினைத்
    தாருங்கள்
    நன்று நடக்கும், தீமை விலகும்

    ReplyDelete
  5. உங்கள் தோழி பற்றி விரிவான பட்டியல் அளித்திருப்பதால்,அவரைப் புரிந்து கொள்ள முடிகிறது.எனவே வருத்தம் அதிகமாகிறது.பிரார்த்திக்கிறேன்,அவருக்காக.

    ReplyDelete
  6. விரைவில் தீர்வு கிடைக்கட்டும்...

    ReplyDelete
  7. தோழி திகைப்பு நீங்கி திடம் கொள்ளவும் எல்லாத் துயரிலும் எதிர் கொண்டு எழவும் பிரார்திக்கிறோம். விரைவில் தீர்வு கிடைக்கட்டும்

    ReplyDelete
  8. இன்றுதான் இப்பதிவைப் படிக்கிறேன்.
    வேதனையும் கோபமும் வருகிறது...
    உங்கள் தோழியைப் பற்றி நீங்கள் எழுதியதிலிருந்து அவர் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

    ReplyDelete