Saturday, June 14, 2014

வாழ்த்துரை

இந்தப் பகுதியில் எனக்கு வந்த
 வாழ்த்துக்களை
இதில் பதிவிட நினைத்துள்ளேன்....


எனது நூலுக்கு என் கணவர் எழுதித் தந்த வாழ்த்துரை
************************************************************
மீ.செல்வக்குமார்
நிர்வாக இயக்குநர்
சக்தி குருப் நிறுவனங்கள்
மற்றும்
பாலா டிரேடிங் ஹவுஸ்
புதுக்கோட்டை
**************************


அதிகாலை
சிற்றினங்கள் சிறகு விரித்துப்
பறக்கத் தொடங்குகின்றன...

கண் திறந்து
விடுகிறது
கணினி....

பொழுதுயாவும்
கணினியின்
கலையும்
கட்டங்களுக்குள்
காசைத்தேடி...

காகங்கள்
மரங்கள்
திரும்பும்
மாலையிலும்
மனம்
போராட்டங்களில்
இருந்து
விடுபடுவதாயில்லை
வாழ்க்கை.....

எதனைத்
தேடுகிறோம்...
எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு....

விரியும்
காலைக்கு
கட்டியம் கூறும்
விடிவெள்ளி
ரசித்து
எத்தனை நாட்கள்
ஆகிறது.....?

பன்னீர்பூக்கள்
பாதம் பதிய
மார்கழி விடியலில்
நடந்து போன நாட்கள்
ஏன்
மீண்டும் வரவேயில்லை....?

இத்தனை நான் தேடலில்
எத்தனை பெற்றோம்??

ஒன்றுமில்லை
அனுபவங்களைத் தவிர...
கவிதைகளை
ரசிப்பதை விட
படைப்பது கடினம்.....

அது
ஒற்றை உயிரில்
உயிராகும் பிரசவம்...

அந்த வலி
பிறர்
ரசிக்கும் போது
மறைகிறது....

சிலர் சிலாகிக்கும் போது
சிலிர்த்தெழுகிறது...

வாசிக்க மட்டுமே
தெரிந்த
எனக்கு
வாழ்க்கைப்பட்ட
நீ.....!
யோசிக்கவும்
தெரிந்திருக்கிறாய்...!

பூஜிக்க வேண்டியவள்
நீ
(ம்....வேறென்னத்த சொல்ல...?)
எழுது...
எழுது....

அழுது அழுது
வீங்கிப் போன
என்னைப் போன்றவர்களுக்கு
அது
கொஞ்சம்
ஆறுதலாய் இருக்கட்டும்...
அத்தோடு
சுவாதி
உன் கவிதைகள்
இந்த சமூகத்துக்கும்
கொஞ்சம்
மாறுதலாய் இருக்கட்டும்

என்றும்
உன்
செல்வா
*****************************************************************





3 comments:

  1. செல்வா அத்தான் தப்பிசுக்கங்க
    பட்டுப் புடவை, ஸ்மார்ட்போன் இல்லை வேறு எதோ வேண்டுமாம் அக்காவுக்கு
    உசாரு... உசாரு
    ஹ்ஹா ஹா
    அருமையான கவிதை அய்த்தான்
    http://www.malartharu.org/2014/01/gold-vein.html

    ReplyDelete
  2. கேட்டதும் வாங்கிக் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்க்கப் போறார்...போங்க....

    ReplyDelete
  3. என்னங்க உங்களோட சேர்ந்து அவரும் கவிதை எழுதக் கத்துக்கிட்டாரா? சும்மா பின்னிருக்காரு

    ReplyDelete