Wednesday, June 25, 2014

பறவையாக ஆசை....

பறவைகளிடத்தில்
அடுத்த வீட்டைக் கண்டு
பொறாமை கொள்ளும்
வன்மையில்லை

பறவைகளிடத்தில்
சேமநலநிதிக் கடன் பெற்று
செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை

அலுவலகக் கட்டிடத்துள்
நுழையுமுன்பு
சூடு, சுரணை, மானம்
ஒதுக்கி வைத்து
உதடு கழிக்கச் சிரித்து
மேலதிகாரியிடம்
பணம் கொடுத்துப் பின்
பதுங்கும் ஒப்பனை இல்லை

குறிப்பாக
வீட்டுகடன் வாங்க
எழுபது கையெழுத்துக்களை
எல்.ஐ.சி. க்குத் தரவேண்டியதில்லை

டப்பாவில்
 சோறை அடைத்துக் கொண்டு
பேருந்தில் பயணித்து
இடி வாங்கி இடி தாங்கி
வேலைக்குப் போக வேண்டுமெனக்
கட்டாயம் இல்லை

பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவரிடம்
வழிய வேண்டியதில்லை

பள்ளிக்கூட
வங்கிக்கணக்குப் புத்தகத்தில்
அவரின் புகைப்படத்தை
பக்கத்தில் ஒட்டவேண்டிய
அபத்தம் இல்லை

யார் கையெழுத்துக்காகவும்
மணிக்கணக்கில்
காத்திருக்கத் தேவையில்லை

சமைக்க வேண்டியதில்லை
துவைக்க வேண்டியதில்லை
பாத்திரம் கழுவ வேண்டியதில்லை

வெள்ளி செவ்வாயில்
விளக்கு விளக்க வேண்டியதில்லை
வீடு துடைக்க வேண்டியதில்லை

நியாயவிலைக் கடைகளில்
பருப்புக்காக நீண்ட வரிசையில்
நிற்க வேண்டியதில்லை

எத்தனையோ தேவையின்மைகள்
ம்....ம்...ம்....
அதிஷ்டக்காரப் பறவைகள்
***********************************************************

4 comments:

  1. சிறகு விரித்த பறவையாய் அருமையான வரிகள்.

    ReplyDelete
  2. கவிதை அருமை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வலைச்சரம் மூலம் முதல் வருகைங்க. வாழ்த்துக்கள்!
    அருமையான கவிதை..
    ஆனால் இன்று பறவைகளுக்கு இயற்கையாய் நாம் எதனை விட்டுவைத்திருக்கிறோம்? அந்த விதத்தில் பாவம் அவை :)

    ReplyDelete
  4. அவ்வப்போது தங்களின் கவிதைகளைப் படித்து வருகிறேன். இன்று வலைச்சரம் மூலமாக தங்களின் அறிமுகத்தை அறிந்தேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete