Tuesday, June 24, 2014

நம் நாடு

   எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்படியாவது இருந்துவிட்டு போகட்டுமே என்று என்னால் போக முடியவில்லை. இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அது எப்படியோ போய்க் கொண்டிருக்கிரது. இங்கு இயற்கைத் தன்மை அற்றுவிட்டதோ என்று கூட நினைக்கத்தோன்றுகிறது.

 நம் நாட்டில் எல்லாக் கலைகளும் வளர வெண்டும் . ஓவியம், சிற்பம், கவிதை, போன்ற நுண்களிலும், மட்பண்டம் செய்தல் பொன்ற கைவினைத் துறையிலும், விவசாயம் , ஜவுளி மற்றும் அதிநவீன கணினி துறையிலும் ஏன் அன்றாட உபயோகப் பொருட்கள் முகப்பூச்சு முதல் பற்பசை வரை அனைத்துத் தயாரிப்பிலும் - அனைத்திலும் நம் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்.

ஜப்பான் மாதிரி நம் நாட்டுப் பொருட்கள நம் மக்களும் உலக நாடுகளின் மக்களும் ஆசைப்பட்டு கேட்டு வாங்க வேண்டும். இப்போதெல்லாம் மேட் இன் ஜப்பான்,மேட் இன் அமெரிக்கா, என்று இருந்தால் மட்டுமே அல்லது இருப்பதால் மட்டுமே அதற்கு அதிக விலை, மக்கள் மத்தியிலும் நல்லா ஒரு மதிப்பு. ஏன் வியாபாரிகள் அனைவரும் இந்தியப்பொருட்களைத்தான் விற்போம் என்றால் மக்கள் வாங்காமலா போய்விடுவார்கள்? அல்லது வாங்காமல் தான் அவர்களால் வாழ, இருக்க முடியுமா? மக்கள் தான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இந்தியப்பொருட்களையே தான் வாங்குகிறோம் என்று சொன்னால் வியாபாரிகள் தொழில் போய் விடக்கூடாதே என்று பயந்து இந்தியப் பொருட்களையே விற்கமாட்டார்களா என்ன? எல்லாம் மக்கள் செய்யும் வேலைதான். எல்லாம் விற்பனையாளர்கள் செய்யும் வேலைதான் . யாரைத்தான் அதிகமாகக் குறை கூறமுடியும்?

இவர்கள் அயல்நாட்டுப் பொருட்கள் என்றால் மோகநிலையில் அலைவதும் பித்துப் பிடித்தாற் போல் பிரமிப்பதும் உடனே அவர்கள் அங்கிருந்தே வந்தவர்கள் போல் அந்த நாட்டுப் பொருட்களை “ஆஹா....ஓஹோ...” என்று பாராட்டிப் பேசி அந்த நாட்டை உயர்வு படுத்தி நம் நாட்டை இழிவு படுத்துவதும் ....இது தானே இப்போது எங்கு பார்த்தாலும் நடக்கிறது? இவர்கள் திருந்த மாட்டார்களா? நம் மக்கள் வாங்காமல் போனதால் விற்பனையாளர்கள் நம் உற்பத்திப் பொருட்களையோ அல்லது அந்தந்தத் தொழிலையோ அயல்நாடுகளுக்கு விற்க நேர்கிறது.

அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் நம் மக்களும் அதை வாங்குகிறார்கள். ஆனால் உற்பத்தி செய்வது நம் இந்தியர்கள் தான். இதை நம் மக்கள் முன்பே செய்திருந்தால் நாம் அயல்நாடுகளுக்கு அவைகளை விற்றிருக்க நேர்ந்திருக்காது அல்லவா? இதே போலத்தான் திரைப்படங்களும் இப்போதெல்லாம் நல்ல படங்களையே எடுப்பதிலையே ! கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என மக்கள் தொடர்புச் சாதனம் மக்களை மாக்களாய் ஆக்க முற்பட அதற்கும் இரசிகர்கள் கூட்டம் நல்ல கருத்துள்ள , மனதை நெருடும் படியாக இருந்தால் அது கலைப் படமாம்.

எல்லாம் வியாபார நோக்கம் நிரம்பியிருக்கும் இவ்வுலகில் கலைகூட வியாபாரமாய் மாறியது பரிதாபத்திற்குரியதே, எல்லா இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இது போலவே படம் எடுத்தால் மக்கள் இரசனையும் இதுபோல் மாறிவிடும். அதே போல் மக்களும் நல்ல படங்களை மட்டுமே பார்த்து வந்தால் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நல்ல படங்களை மட்டுமே எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லவா?

இந்த நாடு இப்படித்தான் போக வேண்டும் என்றில்லாமல் எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பூஜை, புனஸ்காரம், அபிஷேகம், ஆராதனை என்று நடந்தாலும் மறுபக்கம் கொலைகள், கொள்ளைகள் பெண்களை நாசப்புடுத்தும் வேலைகளும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இன்னொரு பக்கம் மது, அபின், கஞ்சா....இப்படியாக இவர்கள் ஏன்தான் இப்படி அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறார்களோ?

நம் நாட்டில் என்ன இல்லை? ஏன் வேலை செய்து சம்பாதிக்க வெளிநாடு செல்கிறார்கள்? இங்கு படித்துவிட்டு நம் மூளையெல்லாம் அய்ல்நாட்டுக்கா பயன் கொடுப்பது? அதனால்தான் அடுத்தநாட்டுக்காரன் உயர்கிறான், நாம் தாழ்கிறோம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று யாராவது யோசித்ததுண்டா? ஏன் யோசிக்க வில்லை?

நம் நாட்டில் நம் வருங்காலக் குடிமக்களான குழந்திகளுக்குத் தேசப்பற்றுக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் குழந்தை பேச ஆரம்பிக்கும் போது அம்மா, நாடு, தேசம், தேசப்பற்று, மொழி, நாட்டின் பெயர், நாட்டை ஆள்பவரின் பெயர் எனக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதை ஓர் அயல்நாட்டுக்காரரே என்னிடம் கூறினார்.

நம் நாட்டில் அப்படியா நடக்கிறது? குழந்தை பேச ஆரம்பித்ததும் மட்டமான ஒரு திரைப்படப் பாடலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். எதிலெல்லாமோ அயல்நாட்டினரைப் பின்பற்றும் நாம் இதில் ஏன் பின்பற்றத் தயங்குகிறோம்?

ஒரு குழந்தைக்கு நாம் ஏன் வெளிநாட்டினரைப் போல் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அக்குழந்தையின் பெற்றோர் இது என்ன பைத்தியக்காரத்தனமாய் கண்டதையும் சொல்லிக் கொடுக்கிறீர்கள்?  நவீன மயமாய் இந்த காலத்திற்கு ஏற்றவாறு வாழ வேண்டும்...பாம்பு திங்கிற ஊரில நான் பச்சப் புல் திம்பேனு சொல்லக்கூடாது என்று சொல்லவும் என் இதயத்திலிருந்து செந்நீர் கண்கள் வழியாக வந்தன்.

காந்தியே , இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலே, நேருவே, பாரதியே ஏன் சுத்ந்திரம் வாங்கிக் கொடுத்தீர்கள்? ஆங்கிலேயன் போகாமலிருந்தால் அயல்நாட்டு ஆட்சிதானே! அப்படித்தான் இருக்கும் என்று என்னால் மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் இந்த ஜனநாயக நாட்டிலே, மக்களுக்கு சர்வ சுதந்திரமும் கொடுக்கப்பட்ட நாட்டிலே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்கு மக்களால் ஆட்சி செய்யப்படும் நாட்டிலா இந்தப் பேச்சு? இருபத்து ஒன்றாம் நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நாம் எங்கு தான் செல்கிறோம்? எப்படித்தான் செல்கிறோம்?

தேசப்பற்றாய் இருப்பது பைத்தியக்காரத்தனமா? கோழைத்தனமா? மக்கள் இப்படி இருப்பதால் தானே காவல் நிலையங்களிலேயே பெண்மைக்கு பாதுகாப்பு இல்லை? பட்டப் பகற்பொழுதில் ஒருவன் மற்றொருவனை வெட்டிக் கொல்கிறான். அதைத் தன் கண்களால் பார்த்தவன் நீதிமன்றத்திற்கு வந்து உண்மைசொல்ல மறுக்கிறான். ஏன் அப்படி? உண்மை  சொல்லப்படக்கூடாதா ஒன்றா? அல்லது கேட்கப்படக் கூடாதஒன்றா?ஒன்றுமே புரிவதில்லை.

காலம் காலமாக கவிஞர்கள், சமுதாயம் சீர்பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் நாடு நலம் பெற வேண்டும் என்று கத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் என்னதான் நடக்கிறது? பக்தி என்றால் கழுத்திலே கொட்டை, நெற்றியிலே பட்டை போட்டுக்கொண்டு கோயில் கோயிலாக சென்று வரும்கூட்டம் ,,,, கடவுளே இல்லை என்று சிலைகளை உடைக்கும் கூட்டம் ...இதைப் பார்க்கும் பொது ஒரு ச்ந்தேகம் வருகிரது . மக்களுக்கு அடிப்படை விஷயங்களிலேயே தெளிவு வரவில்லை என்று, தெளிவு பெற நம் மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்தால் ஏதோ ஓரளவேனும் உருப்படலாம்....படுமா?????????


2 comments:

  1. தங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கெடுக்கிறேன் கவிஞரே!

    ReplyDelete
  2. படலாம்? ,படவேண்டும். நல்ல பகிற்விற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete