Tuesday, June 10, 2014

உருளும் வாழ்க்கை

திருமணம் செய்து வைத்தபின்
மகளைப் புறக்கணிக்கும்
அம்மாக்கள் போலவே....

தனது மகள்களின்
திறமையை முடக்கி
கல்விதர மறுத்த
அப்பாக்கள் போலவே

தனது பழைய
கிழிந்த சட்டையைக்
கொடுத்துவிட்டு

தானம் கொடுத்தேன் என்று
தம்பட்டம் அடிக்கும்
மனிதர்கள் போலவே

சமுதாய நெரிசலில்
போட்டியிட முடியாமல்
பிறன் உழைப்பைகவரும்
திருடர்கள் போலவே

சதைப்பற்று தேடி
நல்ல மகளிர்களை
விலை மகளிர்களாக்கிய
காமக் கொடூரன்கள் போலவே

குடும்ப நிலைமை தெரியாமல்
பார்க்கும் பொருட்கள் கேட்கும்
குழந்தைகள் போலவே

பணம் தான் மனித அளவீடு
என்றெண்ணி
வரட்டு கெளரவம் பார்க்கும்
முரட்டு மூடர்கள் போலவே

ஏழைகளிடம் பிடுங்கி
தன் சுகம் காத்த
தனவான்கள் போலவே

புத்தியுள்ளவன் பிழைப்பான்
என்று சொல்லி
எதையாவது செய்து
பணம் கடையும்
பிணஉயிர்கள் போலவே

தன்நிலை சரியின்மையால்
பிறர் வருங்காலம் பார்க்கும்
அப்பாவி ஜோதிடர்கள் போலவே

அடுத்தவனைத் திட்டியே
தன் தவறுகளை
நியாயப்படுத்தும்
அரசியல் போலவே

வாழ்க்கை உருள்கிறது
எதற்காகவோ?????
******************************************



8 comments:

  1. அருமை ...
    டி.எஸ். எலியட் நினைவிற்கு வருகிறார்.
    தொடர்க
    http://www.malartharu.org/2014/05/innovations-in-marketing.html

    ReplyDelete
  2. ஒவ்வொரு போல வும் நறுக்குன்னு இருக்கு அக்கா!!

    ReplyDelete
  3. வாழ்க்கை தங்கள் கூறியபடிதான் உருள்கிறது
    தம 1

    ReplyDelete
  4. ஸ்டெல்லா மேரிJune 10, 2014 at 8:34 PM

    என்னமோ போடா மாதவா.........ஹா ஹா

    ReplyDelete
  5. பதிவிடத் தெரிகிறது. நல்லாயிருக்கா என் பிளாஅய் மைதிலி வந்துட்டியா நன்றி. எனக்கு இப்பதான் கொஞ்சம் கொஞ்சம்க்

    ReplyDelete
  6. அய் மைதிலி வந்துட்டியா நன்றி. எனக்கு இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் பதிவிடத் தெரிகிறது. நல்லாயிருக்கா என் பிளாக்?????

    ReplyDelete
    Replies
    1. super அக்கா! ப்ளாக் அருமையா இருக்கு. டிராபிக் கலக்கல். அப்புறம் இப்போ தான் பதிவிட தெரிகிறதுன்னு சொல்லுறதெல்லாம் தன்னடக்கம் தமக்கையே !

      Delete
  7. sir i already read that marketing innovations. am m.com know . so i like such writings. thanks for coming

    ReplyDelete