Sunday, June 1, 2014

புதுக்கோட்டை

   புதுக்கோட்டையில் பல்லவன் குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. அற்புதமான குளம்.ஒரு காலத்தில் சாந்தாரம்மன் கோயிலில் என்ன விஷேஷம் நடந்தாலும் குளக்கரையில் மிகப்பெரிய கூட்டமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். கார்த்திகை திருநாள் நாட்களில் அனைத்து மாடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு தெப்பம் நடுவில் இருக்கும் மண்டபத்தைச் சுற்றி வரும். அந்தக்குளம் தான் புதுகையின் மையம். அந்தக் குளம் தான் மக்களின் மகிழ்வு. அந்தக் குளம் தற்போது காய்ந்து போனது. மனமெல்லாம் காயம். என் போன்று புதுகையை நேசிக்கும் எல்லோருக்கும் அது ஆற்ர்க் காயமாய்ப் போனது. இன்று அந்தக் குளத்தை தூர் வாரினார்கள். என் போன்றே அனைத்து மக்களும் அதனை வேடிக்கை பார்த்தார்கள் மனதிற்குள்ளும் அவர்களின் மகிழ்வு முகமெல்லாம் தெரிந்தது. ஒருவர் பிள்ளையாரப்பா இப்பவாவது இவர்களுக்கு புத்தி வந்ததே என்று வேலை பார்த்தவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். அந்தக்குளம் தூர்வாரப்பட வேண்டும் . தூர்வாரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.






மீண்டும் புதுகையின் அழகு மேம்பட வேண்டும்   

4 comments:

  1. நல்ல பதிவு.
    புதுக்கோட்டை பதிவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் நான் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் பட்டறைக்கு சமீபத்தில் வந்திருந்தேன். நீங்களும் கலந்து கொண்டீர்களா?

    ReplyDelete
  2. மேலும் மெருகேறட்டும்...

    ReplyDelete
  3. பழமைகள் போற்றப்பட வேண்டும்! விரைவில் சீர்பட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. புதுகோட்டை பல்லவன் குளம் தெரியும். புதுக்குளம் எப்படி இருக்கிறது?

    ReplyDelete