கட்டு கட்டாய்
இலக்கியங்கள்
காய்ந்து போன படைப்புகள்
கதறி அழும் ஜனநாயகம்.
வெற்றி பெறுவதோ பணநாயகம்
மனங்களை
சிலுவையில் அறைந்து
பணங்களைச்
சம்பாதித்து வருகிறார்கள்
தொலைபேசிக்கும்
இணையத்துக்கும்
நன்றிதான்
அதில் மட்டுமேனும்
நட்பு வளர்க்க முடிகிறது
அதுவும் பல நேரங்களில்
தொலைக்காட்சிகளில்
தொலைந்து போகிறது
அட்சக்கோடுகளிலெல்லாம்
அணுகுண்டுகளின் எச்சம்
தீர்க்கக்கோடுகளில்
திறமைகள்
தீக்கிரையாக்கப்பட்டதின்
தீய்ந்த வாடை
மாற்றமே இல்லாத
மகுடங்கள் எதற்கு???
அழுகையைச் சொல்லும்
ஆனந்த சுதந்திரம் தான் எதற்கு?
ஆதிக்க வேர்களின் கைகளின்
அழுக்கு படிந்த
எங்கள் அகிம்சை
இளைஞர்கள்
வேலைவாய்ப்புக்கிடங்குகளில்
உழைப்பை
அடகு வைத்துவிட்டு
மூளையை
வெற்றுத் தேர்வுகளுக்கு
விரயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்
மனிதநேயம்
படுத்த படுக்கையாய்க் கிடக்க
சோஷலிசம்
சோற்றுக்காக பேசப்படும்
சொல்லானது
தேர்தல் தினங்களில் மட்டும்
தெருவிளக்குகள் எரிவதால்
சமுதாய் இருட்டு
தெரியாமல் போனது
வெட்டியான் கையில்
விழுந்துவிட்டோமோ என
விடுதலையே
வேதனையடைகிறது
அருள்புரிய வேண்டி
ஆண்டவனுக்கே
சில்லறை தரும்
சின்னத்தனம்
தொண்டு என்பதெல்லாம்
இங்கே வெறும்
பசப்பு வார்த்தைகள்!!!!
இரக்ககுணங்கள்
இருப்பதாய்
நடித்துக் கொண்டு
அன்றாடம் நடக்கிறது
இழிசெயல்கள்
போராடுவதும்
நேர்மையும்
நன்னடத்தையும்
இருந்துவிட்டால்
எப்போதும் கிடைக்கிறது
பரிசளிப்புகள் இல்லை
பரிகசிப்புகள்
ஆதிக்கவேர்களாலும்
ஆல்கஹால் மயக்கத்தாலும்
அழிந்து போன
சமுதாயச் ச்ட்டங்கள்
இனியேனும்
சத்தியத்தால்
சமைக்கப்படவேண்டும்
வெற்றியின் முழக்கங்கள்
விண்ணைப்பிழக்கட்டும்
மண்ணைப் பிழந்து
உழைப்போம்
எல்லோர் நெஞ்சிலும்
நிறையட்டும்
மனிதநேயம்.
இலக்கியங்கள்
காய்ந்து போன படைப்புகள்
கதறி அழும் ஜனநாயகம்.
வெற்றி பெறுவதோ பணநாயகம்
மனங்களை
சிலுவையில் அறைந்து
பணங்களைச்
சம்பாதித்து வருகிறார்கள்
தொலைபேசிக்கும்
இணையத்துக்கும்
நன்றிதான்
அதில் மட்டுமேனும்
நட்பு வளர்க்க முடிகிறது
அதுவும் பல நேரங்களில்
தொலைக்காட்சிகளில்
தொலைந்து போகிறது
அட்சக்கோடுகளிலெல்லாம்
அணுகுண்டுகளின் எச்சம்
தீர்க்கக்கோடுகளில்
திறமைகள்
தீக்கிரையாக்கப்பட்டதின்
தீய்ந்த வாடை
மாற்றமே இல்லாத
மகுடங்கள் எதற்கு???
அழுகையைச் சொல்லும்
ஆனந்த சுதந்திரம் தான் எதற்கு?
ஆதிக்க வேர்களின் கைகளின்
அழுக்கு படிந்த
எங்கள் அகிம்சை
இளைஞர்கள்
வேலைவாய்ப்புக்கிடங்குகளில்
உழைப்பை
அடகு வைத்துவிட்டு
மூளையை
வெற்றுத் தேர்வுகளுக்கு
விரயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்
மனிதநேயம்
படுத்த படுக்கையாய்க் கிடக்க
சோஷலிசம்
சோற்றுக்காக பேசப்படும்
சொல்லானது
தேர்தல் தினங்களில் மட்டும்
தெருவிளக்குகள் எரிவதால்
சமுதாய் இருட்டு
தெரியாமல் போனது
வெட்டியான் கையில்
விழுந்துவிட்டோமோ என
விடுதலையே
வேதனையடைகிறது
அருள்புரிய வேண்டி
ஆண்டவனுக்கே
சில்லறை தரும்
சின்னத்தனம்
தொண்டு என்பதெல்லாம்
இங்கே வெறும்
பசப்பு வார்த்தைகள்!!!!
இரக்ககுணங்கள்
இருப்பதாய்
நடித்துக் கொண்டு
அன்றாடம் நடக்கிறது
இழிசெயல்கள்
போராடுவதும்
நேர்மையும்
நன்னடத்தையும்
இருந்துவிட்டால்
எப்போதும் கிடைக்கிறது
பரிசளிப்புகள் இல்லை
பரிகசிப்புகள்
ஆதிக்கவேர்களாலும்
ஆல்கஹால் மயக்கத்தாலும்
அழிந்து போன
சமுதாயச் ச்ட்டங்கள்
இனியேனும்
சத்தியத்தால்
சமைக்கப்படவேண்டும்
வெற்றியின் முழக்கங்கள்
விண்ணைப்பிழக்கட்டும்
மண்ணைப் பிழந்து
உழைப்போம்
எல்லோர் நெஞ்சிலும்
நிறையட்டும்
மனிதநேயம்.
//தொலைபேசிக்கும்
ReplyDeleteஇணையத்துக்கும்
நன்றிதான்
அதில் மட்டுமேனும்
நட்பு வளர்க்க முடிகிறது//
மனித நேயம் தழைக்கட்டும்
தம 1
ReplyDeleteமண்ணைப் பிழந்து உழைப்போம்...
ReplyDeleteசிறப்பு...!
என் நன்றிகள் எப்போதும் உங்களுக்கு
ReplyDelete