சுருண்டு படுத்திருக்கிறாள்
ஒரு தேவதை
மற்றொரு தேவதைக்கு
நாளை பிறந்த நாள்
பிறந்த நாளின்
எந்தக் கொண்டாட்டமும்
தேவையற்று
என் முகம் நோக்குகிறது
அந்த தேவதை....
நான் வருத்தப் படுவேன் என்றோ
மூத்த தேவதைக்கு
உடல்நலம் சரியில்லையென்றோ
ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது
இளம் தேவதையின் அமைதியில்....
தோழிகளை வரச் சொல்லியிருந்த
துள்ளல் அற்று
என்னை
அடிக்கடி கடக்கிறாள்...
நானாக ஏதேனும் சொல்வேன் என்று....
தேவதைகளின் துள்ளல்கள்
இல்லாத வீடும் துவண்டு கிடக்கிறது
...எந்த ஆடம்பரமும் இன்றி...
இந்த தேவதையின் பிறந்தநாளில் தான்
நான் மகிழும் படியாக
ஏதேனும் கிடைத்துவிடும் எனக்கு
இந்தப் பிறந்தநாளிலும்
பெற்றிருக்கிறேன்
நூலக ஆணை...
சிறந்த ஆசிரியர் பட்டம்..
பதிப்பக உரிமை .....
கொஞ்சம் நகைகள்...
புதிய நட்பு....
எல்லோரிடமும் நன்மதிப்பு....
என்று நிறைய நிறையப்
பெற்றிருக்கிறேன்......
தேவதைகளின் கோபம்
தேவதைகளின் அழுகைகள்
தேவதைகளின் வருத்தம்
தேவதைகளின் புன்னகைகள்
தேவதைகளின் குறும்புகள்
என்று
தேவதைகளைப் பற்றி
அத்தனையும்
எனக்கு அத்துப்படி!
தேவதைகளின் இருப்பிடமே
என்
இருப்பிடமாக இருப்பதால்
எப்போதும்
மகிழ்வும் கொண்டாட்டமும் தான்
என்றாலும்
.தேவதைகள் முகம் சுழிக்கும் போது
என்
மனசோடு வாழ்க்கையும் சுருங்கிப் போகிறது...
வீட்டில்
தேவதைகள் இல்லாதவர்கள்
பாவம் தான்...
ஆகா...! ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மையில் தேவதை போலத் தான் இருக்கிறாள் உங்கள் பெண். இப்போது என்ன வயது அவளுக்கு?
ReplyDelete