Saturday, March 15, 2014

என் இறைவா.....(கஸல்)

என் இறைவா

சிறிய பதவி உயர்வுகளுக்கே
மனிதர்களின்
சிந்தை கலைந்து போகிறது
நான்கு நபர்களுக்கு மேல்
வேலை செய்வதை
நாற்பது பேர் தனக்குப் பணியாள்
எனக் கருதிக் கொள்கின்றனர்
மமதையில்
தங்களுக்குத் தாங்களே
மகுடம் சூட்டிக் கொள்கின்றனர்
அதட்டுவதும் பேசுவதும்
வேலை வாங்குவதும்
பெருமிதம் அடைவதும்
அடேயப்பா!

என் இறைவா
அவர்க்களுக்கு மேல் பணி செய்வதை
கடமையாகவோ
கடவுளின் வடமாகவோ,
தன் திறனுக்கு கிடைத்த பரிசு
என்பதாகத்தானே நினைக்கவேண்டும்

தனக்குக்கிடைத்ததை
 அதிகாரமாகவும்
ஆடம்பரமாகவும்நினைத்து
அலட்டிக்கொள்கிறார்கள்
பதவிபோதை
அவர்களைப்
பாடாய்ப் படுத்துகிறது

என் இறைவா
நீ நினைத்தால்
இந்த பதவி எம்மாத்திரம்?
நீ அணைத்தால்
இந்தப் பதவி உயரும்
நீ அணைத்தால்
இந்தப் பதவி அனைத்தும் போகும்
ஏன் யோசிக்கவில்லை

அருளை யாசிக்கவில்லை
அன்பை பூசிக்கவில்லை

என் இறைவா
நான்
எத்தனை உயரம் போனாலும்
இரக்கமுறும் மனம் தா
எந்த்ப் பதவியில் இருந்தாலும்
பண்பான வார்த்தைகள் தா

என் இறைவா
அதே போல்
அந்த அதிகாரத்திற்கும்
ஆளுமைகளுக்கும்
என்ன பதில் தருவாய்
எப்போது பதில் தருவாய்????
******************************

1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:23 AM

    நல்ல கவிதை என் மனம் உள்ளே சென்று விட்டது

    ReplyDelete