Friday, March 14, 2014

என் இறைவா (கஸல்)




என் இறைவா
பேனாவிலிருந்த மை
எழுத எழுதத்
தீர்ந்து போவது போலவே
சிலருக்குப்
 பாசங்களும் தீர்ந்து போகிறது
மீண்டும் மை நிரப்ப
வேறு மைக்கூடு தேடுகிறார்கள்
அல்லது
பேனாவை வீசிவிடுகிறார்கள்
பாசப் பிணைப்புகள்
என்று சொல்லிப்
போலி நடிப்புகள்
என் இறைவா
நான்
பழகுவதற்கு முன்பே
இவர்களை
எனக்கு
அடையாளம் காட்ட மாட்டாயா????
****************************************

4 comments:

  1. அப்படி அடையாளம் காட்டி விட்டால் நாம் நிம்மதியாய் வாழ்ந்து விடலாமே தோழி

    ReplyDelete
  2. ஏன் இத்தனை புலம்பல் கவிஞரே?
    இறைவனிடம் கேட்பதை மனிதரிடம் நேரடியாகவே கேட்டு, பதிலும் பெறலாமே? கடவுள் என்றாவது பதில் சொல்வாரா என்ன? அவருக்குப் பாவம் எத்தனை கோடிப் பேரைக் கவனிக்கும் வேலை? மனிதர் அ்ப்படியல்லவே? ஒரு சிலர்தான் உடனடிக் கவனிப்பில் இருப்பார்? பதிலும் உடனடியாகக் கிடைக்கும் அல்லவா? அது என்ன கஸல்? மொழிபெயர்ப்பா? அப்படிஏதும் குறிப்பும் இ்லலை? விளக்குவீர்களா?

    ReplyDelete
  3. கஸல் என்பது மிக பிரசித்தி பெற்ற ஒரு கவிதை முறை....ஒரே கோணத்தில் ஒருவருக்கோ...அல்லது ஒரு சமுதாயத்திற்கோ தொடர்ந்து எழுத்ப்படுமானால் அது கஸல் எனப்படும்...சமீத்தியக் கவிஞர்கள் இதை காதல் கவிதைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.... அப்படிப் பார்த்தால் திருமுருகாற்றுப்படை,,,பரணிகள் எல்லாம் இவ்வகையைச் சார்ந்தவைதான் என்பது என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது...நவீன கவிதைகளில் முதன்முதலில் இந்த உத்தியைப் பயன்படுத்தியவர் கவிஞர் நீலமணி..
    அடுத்து இது புலம்பல் இல்லை....மனிதர்களிடம் சொல்வது போல் கவிதை அமைத்தால்... அது எந்த நபருக்குச் நான் சொல்கிறேன் என்பது விளங்கிவிடும்...சொல்லாமல் இருக்கும் போது புரிந்து கொள்கிறார்கள்....இது ஒரு உத்தி தானெயொழிய முறையீடோ அல்லது வேறு எதுவுமோ இல்லை....
    அப்புறம் ஐயா நேரடியாக கேள்வி கேட்பது எனக்குப் பிடிப்பது இல்லை.... நான் ஒரு ரகம்....அன்பு கொடுத்தால் அன்பு தருவேன்...பகை கொடுத்தாலும் அன்பே தருவேன்....புலம்பல் என்று பாராமல் இப்படி மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன் அநேகமாக நீங்கள் கூட சந்தித்து இருக்கக் கூடும் ...அந்த நோக்கில் பாருங்களேன்.....தயவுசெய்து....

    ReplyDelete
  4. நாகப்பன்June 5, 2014 at 4:43 AM

    இவ்வளவு பெரிய் கவிஞருக்கு கஸல் பற்றித் தெரியாதது வருத்தம் தான். நீங்கள் நீலமணி எழுத்துக்கள் படித்ததில்லையா முத்துநிலவன் அய்யா?( உங்கள் கவிதை இன்றும் எங்கள் பல்கலை பாடமாக உள்ளன.)

    ReplyDelete