Monday, February 24, 2014

ஆசிரியர்கள்....மெழுகுவர்த்திகள்......(கவிதை)











கிறுக்கர்கள்!
நாங்கள் கிறுக்கர்கள்!
கரும்பலகையில் கிறுக்கிக் கிறுக்கி-எங்கள்
வாழ்க்கையை இறுக்கலாக்கிக் கொண்டவர்கள்!

இனிமையை நினைத்து
ஏக்கத்திலே வாழ்ந்து
தூக்கத்தில் கூட
துயரைப் போக்கியவ்ர்கள்

குப்பைகளை நீக்கும் போது
துடப்பக்கட்டைகள்
சுத்தம் செய்த பின்போ
நாங்களே குப்பையானோம்

எங்களின் வேதங்கள்
பாடங்களாகின்றன
ஆனால்....
வேண்டுகோள்கள்????????
நிராகரிப்புகள்.

வட்டிக்கு வாங்கிடுவார்
வாழ்க்கையில் சிதைந்தார்
செட்டிக்குக் கொடுத்தே
நிகழ்கால செந்தமிழாய்ப் போனார்
மட்டிக்கும் புத்தி சொல்லி யாமே
மணலாகிப் போனோம்

வெட்டியாய் பொழுதைக் கழிப்பதை
குட்டியாய்க் கூட சம்மதியார்
வாழையடி வாழையாய் ஏழையென்றே
வரம் பெற்ற பெருமையும் உண்டு சிலருக்கு

இப்போதெல்லாம் இவர்களுக்கு
கல்லூரிகள் தாம்
கருமாதி நிலையம் ஆகின்றன
பள்ளிகள்தாம்
பாடை செய்யும் இடமாகின்றன
ஏணியாய் இருப்பவரை-நமை
ஏற்றத்தில் வைத்தவரை-தங்கத்
தூளீகட்டி போற்றவேண்டாம்
தூய சந்தனம் தர வேண்டாம்
துயர்பட வைக்காமல்
இருந்தால் போதாதா?

தவறுகள் திருத்த வந்தவருக்கே
இங்கே
தண்டனை வழங்கப்படுகிறது...


பார்வைகளை முறைப்பு என்கிறார்கள்
போதனைகளை
”போர்” என்கிறார்கள்
சொன்னதைத் திருப்பச் சொன்னால்
டேப் என்கிறார்கள்
வகுப்புகளை மொக்கை என்கிறார்கள்
படிக்காமல் இருந்து கொண்டு
பல்பு கொடுத்தோம் என்கிறார்கள்

விதைகளை விருச்சமாக்கும்
இவர்கள்
வாழ்வு வெளிச்சமாகுமா?

************************************


3 comments:

  1. உண்மைகள் நெஞ்சை பதற வைக்கின்றன...

    ReplyDelete
  2. மாணாக்கர்களின் மாசு நீக்கும் மாணிக்கங்கள் ஆசிரியர்கள்! இதை பலர் உணர்வது இல்லை! இதற்காக வருந்த வேண்டாம். ஒளி கொடுக்கும் விளக்கு! அதையும் தூண்டி விடின் இன்னும் பிரகாச மடையும். அதைப்போல ஆசிரியர்களுக்கு சிறு ஊக்கம் தரும் வார்த்தையும் இன்னும் உற்சாகத்தை தரும். இதை அனைவரும் உணர வேண்டும். அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சாமிக்கண்ணுFebruary 24, 2014 at 6:27 AM

    ஆசிரியர் என்ற முறையில் இதை உணர்கிறேன்

    ReplyDelete