Tuesday, January 7, 2014

பாரதி எனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே- மெட்டு
********************************************
பாரதியார் எனும் போதினிலே-ஒரு
பாசம் பிறக்குது உள்ளத்திலே
சாரதியாம் அவன் நாட்டினுக்கு- புதுச்
சக்தியைத் தந்தனன் பாட்டினுக்கு!

பெண்மையைப் போற்றிடு நாட்டினிலே-சாதி
பேதம் ஒழித்திடு வீட்டினிலே
அன்பினால் மக்களை வென்றி டென்றான் - தமிழ்ப்
பண்பினால் பாரதம் போற்றிடுவான்

பூவிரிச் சோலையில் வீடுகட்டி - அங்கு
பாவிரித் தாடிட கூடுகட்டி
கத்திடும் குயிலதன் ஓசையினை - அவன்
நித்தமும் கேட்டிட விரும்பிடுவான்!
*******************************************

2 comments:

  1. அருமை... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சாரதியாம் அவன் பாட்டினுக்கு- புதுச்
    சக்தியைத் தந்தனன் நாட்டினுக்கு! - என்று இருந்திருக்கலாம். அதே போல,
    பெண்மையைப் போற்றிடு வீட்டினிலே-சாதி
    பேதம் ஒழித்திடு நாட்டினிலே - என்று இருந்திருக்கலாம். அதே போல,
    பூவிரிச் சோலையில் வீடுகட்டி - அங்கு
    பாவிரித் தாடிட கூடுகட்டி
    கத்திடும் குயிலதன் ஓசையினை - அவன்
    நித்தமும் கேட்டிட விரும்பிடுவான்! - என்பதில் முந்திய பாக்களிற் போலில்லாமல் இரண்டாம் அடியில எதுகை என்பது மாறி இரண்டாம் வரியில் எதுகை என்பது வந்தது? (அடி வேறு, மடக்கி வரும் வரி வேறு) எனினும் ஓசை நன்றாக வருகிறது, சொற்களில் சிக்கனமும், கற்பனையும் இன்னும் யோசிததிருக்கலாம். முயல்க.

    ReplyDelete