Thursday, December 5, 2013

குறும்பூக்கள்

சுதந்திரத்தில் சமாதான மடையாத
தேசியக்கொடி
படபடக்கிறது


புதிய ஆடைகளைக் காட்டுகிறாள்
விற்பனைப் பெண்
கிழிந்து தைத்த ஆடையணிந்து

வீட்டை விற்றாலும்
விற்க முடிவதேயில்லை
வாழ்ந்த நினைவுகளை


மழை அழகுதான்
வீட்டுக்குள்
பெய்யாதவரை
***************************

2 comments:

  1. வணக்கம்

    ரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்ந்த நினைவுகள் உட்பட அனைத்தும் அருமை...

    ReplyDelete