Thursday, December 26, 2013

தவிப்புகள்

இயல்பு மீறி முகத்தை
இறுக்கமாய் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
ஒவ்வொரு வாக்கியங்களுக்கும்
இடையில் நிறைய
யோசிக்க வேண்டியிருக்கிறது
எப்போதும் எல்லோரையும்
அண்ணன் என்றே
அழைத்துத்தொலைய வேண்டியிருக்கிறது
பேச்சுக்கள் வேறு பாதையில்
போய்விடக்கூடாதென்ற பயத்தில்
முடிந்தவரை
சார், அய்யா,தோழர்
போன்ற சொற்கள் தவிர்த்து
அண்ணன் என்றே
அழைத்துப் பழகிகிறேன்.

3 comments:

  1. மனித மனம் குரங்கு சுவாதி.அதற்காக எல்லோரையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் .நம்மைச் சுற்றி நல்லவர்களும் இருக்கின்றார்கள்.நன்று

    ReplyDelete
  2. அண்ணா என்ற வார்த்தையை பொருத்தமில்லா நபருக்கு பயன்படுத்தவேண்டிய சுழல் பற்றிய உங்கள் கவிதை அருமை சகோதரி ,புத்தாண்டுவாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சாமிக்கண்ணுFebruary 24, 2014 at 6:35 AM

    அடக் கொடுமையே...என்னையும் அண்ணன் என்று அழைத்தீர்களே

    ReplyDelete