வணக்கம் சொல்லி வரவேற்போம்..
இனி வரும் பொழுதுகள் இனிமையாய் இருக்கட்டும்
.
அன்பில் நனைவோம்
மனமெல்லாம் வாசம் வீசட்டும்
மகுடம் நம் தலைக்கு காத்திருக்கட்டும்

ஒவ்வொரு விடியலும் 
இனிமையாய்..இயல்பாய் விடியட்டும்..

வலம் வரும் நாட்கள்
வசந்தத்தை ஏந்தி வரட்டும்

புலரும் பொழுதுகள்
புதுமையாய் விடியட்டும்

அடுத்தவ்ர்களின் பொறாமைகளையும்
நட்பால்...
அன்பாய் மாற்றும் சக்தி 
நம் கைவரப்பெறுவோம்.
.
இந்த மானுடத்தின் கடைசி மனிதன் வரை 
நம் நேசம் விரியட்டும்

அழிந்தே போகட்டும் பழ மடமைகள்
துளிர்ந்தே எழட்டும்
புத்துணர்வின் வீச்சுக்கள்!

ஒவ்வொரு நாளும் 
புன்னகையுடன் புன்னகையுடன்
எதிர்கொள்வோம் எதிரிகளையும்
!
தாராளமாகவே வழங்குவோம் 
நம் அன்பை
நம்மை புறக்கணிப்பவர்களும்...
மறைப்பவர்களுக்கும்....
மறப்பவர்களுக்கும்....

எல்லோருக்குமானதாக இருக்கட்டும்
நமது பிரார்த்தனைகள்....

புத்தாண்டு வாழ்த்துக்கள்
.