முதலிலும் கடைசியிலும்
வில்லன்களே வெற்றியடைகிறார்கள்
கதாநாயகர்கள் கைகட்டிக் கொண்டே...
பதினைந்து நாளுக்குள் தீர்ந்து போனாலும்
மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
நிலா
வெள்ளையாய் உடுத்தும் ஆண்களிடம்
வெள்ளையாய் இல்லை
மனம்
55
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
அலுவலகத்திற்குள்ளும்
கொசுக்கடி
விலையில்லா அரிசித்தின்று விட்டு
காசுக் கொடுத்துப் போனான்
கழிப்பறைக்கு
வண்டி வண்டியாய்
பொய்களோடு வருகிறார்கள்
தேர்தல் நேரம்
54
குழந்தைகள்
ஆங்கிலப்பள்ளி!
சமையல் அறை
வீடு பராமரிப்பு
வீணாகிப்போகிறாள் பெண்
உண்மை... உண்மை வரிகள்... தொடர வாழ்த்துக்கள்....
ReplyDeleteமாசு கட்டுப்பாட்டு வாரியம்
ReplyDeleteஅலுவலகத்திற்குள்ளும்
கொசுக்கடி
விலையில்லா அரிசித்தின்று விட்டு
காசுக் கொடுத்துப் போனான்
கழிப்பறைக்கு
ரெண்டும் நல்லா வந்திருக்கு.
சொற்களில் இன்னும் சிக்கனமாக இருந்து,
சொல்ல வருவதைக் காட்சிப் படுத்தினால் கவிதை நிற்கும்.
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDelete