Wednesday, November 6, 2013

அவங்க அப்படித்தான்

பதவி ஏற்கும்
ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள்
நான்
பாட்டாளீகளீன் தோழன் என்று
இதுவரை நடந்ததெல்லாம் போகட்டும்
இனிஎங்களால் விடியும் என்கிறார்கள்
ஆனால்’இவர்களாலும் விடிவதில்லைஎதுவும்
பதவியில் இருந்த
பழையவர்கள் செய்ததால் என்றே
பாதி கேள்விகளூக்கு
பதிலளீக்கிறார்கள்’
முழுதாய் ஒன்று கூட செய்யாமல்
அடுத்தது என்ன செய்ய வேண்டும்
என்ற யோசனை தவிர்த்து
அடுத்த அறிக்கை பற்றியே
ஆலோசிக்கிறார்கள்
எப்படி சமளிக்கலாம் என்று
சிந்திப்பதாலேயே
எப்படி சரி செய்யலாம் என்பதை
மறந்து விடுகிறார்கள்
நம்பிக்கையில் தான்
பதில் சொல்கிறார்கள்
நடத்த முடியாது என்பதையோ’
மனதிலிருத்தி
இன்னும் கொஞ்சம் காலம்
அவகாசம் கொடுங்கள் என்று சொல்லியே
அவதிப்பட வைக்கிறார்கள்
அடிப்படைத் தேவைகள் முடிந்து
ஆசைகள் நிறைவேறும்
என்ற கனவுகள்
கல்லறைக்குள் சிதைகின்றன அல்லது
கனவுகளாகவே விரிகின்றன
இவரே கூட
அடுத்தமுறையும் தேர்வாகலாம்
அல்லது அடுத்தவர் பதவியேற்கலாம்
நாம்
தயாராகிக் கொள்ள வேண்டும்
கோரிக்கைகளை விரைவில்
நிறைவேற்றுவோம் என்ற
பழைய பல்லவி பதில்களுக்காக!
****************************************


3 comments:

  1. வணக்கம்
    ஆசைகள் நிறைவேறும்
    என்ற கனவுகள்
    கல்லறைக்குள் சிதைகின்றன அல்லது
    கனவுகளாகவே விரிகின்றன

    அருமையாக சொன்னிர்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. vaazhthukal swthi.... nandra ezuthukiraai... naam kaluril paditha pothium tharpothu athika munetram. epothum nee nalla irukanum

    ReplyDelete
  3. மலர்மகன்June 17, 2014 at 9:23 PM

    அட போங்க ஓட்டுப்போட்டது தான் மிச்சம்

    ReplyDelete