Saturday, October 5, 2013

தவறவிட்ட

தவறவிட்ட......


அடிக்கடி தவற விடுகிறேன்
எனது கவிதைகளை
வெங்காயம் வதக்கும் போதும்
காய்கறி நறுக்கும் போதும்
அரிசியை அழுத்திக் கழுவும் போதும்
மாவு அரைக்கும் போதும்
ஒவ்வொரு முறையும்
அடுப்பில் பொரிந்து வெந்து......
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
கிளர்ந்தெழுகிறது
தூங்கி எழுந்த
மனிதர்களாய்........

*****************************

7 comments:

  1. வணக்கம்... கவிதை அருமை... பாராட்டுக்கள்...

    swathiumkavithaium.blogspot.in அல்ல... http://swthiumkavithaium.blogspot.in (Missing a)

    ஒவ்வொரு பதிவிற்கும் தலைப்பு கொடுங்கள்... மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்...

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒண்ணுமே புரியலை.. உங்க command பாத்து கண்ணீர் தான் வருது.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இது போலும் எதார்த்தக் கவிதைகள்தான் என்னைக் கவர்ந்தவை. அய்க்கூவாகவே எழுத வேண்டும் என்று பிடிவாதம் தேவையில்லை. உணர்வைச் சரியாகச் சொல்ல வடிவம் ஒரு தடையல்ல. வாழ்த்துகள் கவிஞரே! நண்பர்கள் வட்டத்தையும் உள்ளிடுங்கள்

    ReplyDelete
  5. நம் காலத்தில் இதற்கு விடிவில்லை

    ReplyDelete