Monday, October 21, 2013

சொல்வதற்கு மட்டுமான சொல்

எல்லோரும்
எப்போதும் ஏதேனுமொன்றை
சொல்லிவிட்டுப்போகிறார்கள்
என்னிடம்
அப்படி செய், இப்படி செய் என்றோ
அதை செய்யாதே, இதை செய்யாதே என்றோ
அறிவுரைகள் நிறைந்ததாகவே
இருக்கிறது
பலருடைய பேச்சும்
இன்னும் சிலவைகள்
உத்தரவு போலவோ, ஆணை போலவோ
பிறப்பிக்கப்பட்டு விடுகின்றன!
எனக்குச் சொல்லியவைகளும்
எனக்குச் சொல்பவைகளும்
அவர்கள்
செய்து பார்த்ததா
செய்யாமல் விட்டதா
எனத்தெரியவில்லை
அவர்கள் சொல்லியதை
அவர்களே கூட
பின்பற்றுவார்களா என்று கூடத்தெரியாது
பின்பற்ற இயலுமா என்பதையும்
கூட அறியார்கள்
ஆனாலும்
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்
நான் செய்வேனா
செய்யப்போகிறேனா
செய்து விடுவேனா
என்பது பற்றி அறியாமல்......
******************************

4 comments:

  1. நன்று .சுவாதி.

    ReplyDelete
  2. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    ReplyDelete
  3. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.

    ReplyDelete
  4. என் தளத்தில் : நான் + துன்பம்

    (தலைப்பின் மேல் சொடுக்கினால் எனது தளத்திற்கு சென்று விடலாம்... நீங்கள் செய்தது போல... நன்றி...)

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete