Friday, July 18, 2014

செய்திகள்






இன்று பெருஞ்சுணை மற்றும் கட்டியாவயல் தாய்த் தமிழ் பள்ளிகள் இணைந்து காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடத்திட்ட மிட்டு பெருஞ்சுணைப் பள்ளியில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மு.இராசா வடகாடு தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் தலைமை வகித்தார். காமராஜர் அறக்கட்டளையிலிருந்து காமராஜர் புகைப்படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. புகைப்படத்தை திறந்து வைத்து கவிஞர் சுவாதி சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர் ,மாணவர்,பெற்றோர் என்று முத்தரப்பிலும் எதிர் கொள்ளும் சவால்களும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி எடுத்துரைத்ததோடு காமராஜரின் வாழ்வில் அர்ப்பணம் , தற்கால் அரசியல் , அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளில் நாம் பின்பற்ற வேண்டியவை பற்று எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். கட்டியாவயல் பள்ளி தாளாளர் பாபுராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சிங்கப்பாண்டியன் தாய்த்தமிழ்ப் பள்ளி கிளிக்குடி வாழ்த்துரை வழங்கினார்.  கட்டியாவயல் பள்ளி தலைமைஆசிரியர் சசிகலா நன்றி கூறினார். 


2 comments:

  1. காமராசர் பிறந்தநாளில் ஒரு முத்தான விழா
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete