இன்று நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகவும் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழாவாகவும் இரு பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு காமராஜர் உடையணிந்து காமராஜர் போல வேடமிட்ட மாணவர்கள் கல்வி முழக்கக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலம் வந்தார்கள்...ஊர்வலத்தினை 9பி நத்தம்பண்ணை பஞ்சாயத்துத் தலைவர் சேதுராமன் கொடி அசைத்துத் துவக்கி வைத்துப் பேசினார். கல்விப் புரட்சியே நாட்டின் புதுமை, பொருளாதார வளர்ச்சி என்று புதிய முழக்கங்களை முழங்கக்கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது நிகழ்ச்சியாக தமிழ் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. எழுத்தாளர், பேச்சாளர் திரு நா.முத்துநிலவன் அவர்கள் பாரதியார் பாடல்களைப் பாடியும் மாணவர்கள் தங்கள் வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள நடந்து கொள்ள வேண்டிய முறைகள் , பயணங்கள், வாழ்வின் போக்குகள் பற்றி சிறப்புரை ஆற்றி மாணவர்களை உற்சாகப் படுத்தி பேசி மன்றத்தை துவங்கி வைத்தார்.
கலை நிகழ்சிகளைக் கண்டு களித்த கவிஞர் நா.முத்துநிலவன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
No comments:
Post a Comment