Sunday, June 15, 2014

வணங்கு தமிழ்( குழந்தை பாடல்)

அன்னைத் தமிழை வண்ங்கிடுவோம்
அன்பை நாளும் வளர்த்திடுவோம்
கண்ணாய் உயிராய்ப் போற்றிடுவோம்
கயமை வீழ்த்தப் போரிடுவோம்

கன்னற் சுவையைக் கனியமிழ்தைக்
கருத்தாய் நாளும் பருகிடுவோம்
மண்ணைக் காத்துப் போற்றிடவே
மங்காத் தமிழே உதவிடுவாய்

விண்ணை முட்டும் புகழ்பெற்று
வீரம் கொண்டு வாழ்ந்திடவும்
எண்ணத் தூய்மை எய்திடவும்
எம்க்கு நீயும் வழிகாட்டு

என்றும் எங்கள் நெஞ்சினிலே
எழிலாய் வாழும் தாயே நீ
வெற்றி நல்கிக் காத்திடுவாய்
வேண்டும் உயர்வைக் காட்டிடுவாய்
*******************************************

3 comments:

  1. அன்னைத் தமிழை வணங்கிடுவோம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமை அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தட்சிணாமூர்த்திJune 19, 2014 at 8:55 PM

    உங்கள் தமிழ் அழகாய் இருக்கிறது...வாழ்த்துக்கள்

    ReplyDelete