Friday, June 6, 2014

பணி நிறைவு விழா

   இன்று இராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஆர்.போஸ் M.Sc.,M.Ed.,M.Phil.,  அவர்களுக்குப் மஹாராஜ் மஹாலில் பணி நிறைவுப் பாராட்டு விழா நடைபெற்றது.

   இவர் பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியராக 22 ஆண்டுகளும், தலைமை ஆசிரியராக 12 ஆண்டுகளும் மொத்தம் 34 ஆண்டுகள் கல்விப்பணி செய்தவர்.

   இவர் என் அப்பா வீட்டிற்கும் குடும்ப நண்பர். என் கணவர் வீட்டிற்கும் குடும்ப நண்பர். எனவே நானும் என் கணவரும் இந்நிகழ்ச்சிக்குச் சென்று அவருக்கும் அவரது துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி, அவரிடமிருந்து ஆசி பெற்று வந்தோம்.

   விழா சிறப்புகள்:
   ******************

   அழைபிதழை நேரடியாக வந்து தந்த பின்னும் ஒரு பதிவு செய்யப்பட்ட அவரது குரலில் அனைத்து நண்பர்களின் தொலைபேசிக்கு நான்கைந்து முறை அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. ( தேர்தல் ல அம்மா வாக்களிக்கக் கேட்டாங்களே அதே மாதிரி)

   ஒரு அரசு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு நீண்ட வரிசையில் நின்று பொன்னாடை போர்த்தியது மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

   கல்வியாளர்கள் தவிர பொறியாளர்கள், அரசியல் தலைவர்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், கருவூல ப் பணியாளர்கள், காவலர்கள்,கவிஞர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள். பல்வேறு அமைப்பைச்சார்ந்த சான்றோர்கள், பெரிய தொழிலதிபர்கள், சிறிய தொழில் முனைவோர்கள், என்று அனைத்துத் தரப்பு மக்களும் வந்திருந்தனர்.

   விழாவின் உணவு ஏற்பாடுகளை என் இனிய தம்பி திரு ஜெய்பார்த்தீபன் அனைவரையும் வாங்க உட்காருங்க என்று ஒவ்வொருவருக்கும் சொல்லி நான்கு நீண்ண்ண்ண்ண்ண்ட மேசைகளிலும் என்னென்ன பரிமாற வேண்டும் ,என்று ஆணையிட்டுக்கொண்டே, வரவேற்றுக் கொண்டும், சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்.

   திரு அய்யாவு, திரு காசிராஜன் மேடை நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டனர்.

   உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சற்று தாமதமாக வந்தார் கவிஞர் தங்கம்மூர்த்தி தன் துணைவியாருடனும்( திருமதி அஞ்சலி) தன் இணைபிரியாத தோழர் முத்துச்சாமியுடனும்.(நண்பர் பேரவை) அவர் வந்த உடன் பாடிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் கவிஞர் தங்கம் மூர்த்தி வந்துவிட்டார் என்று மைக்கில் கத்தி தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

   என் தோழி புதுக்கோட்டையின் குயில், திருமதி மீனாசுந்தர் தன் அழகுக்குரலால் நடத்திட்டப் பாட்டுக் கச்சேரி கேட்பவர்கள் காதில் தேனைப் பாய்ச்சியது.

   இன்று மஹாராஜ் மஹால் இருக்கும் தெருவெங்கும் அடைத்து நின்றது பெரிய மகிழுந்துகளும், இருசக்கர வாகனங்களும். கொஞ்ச நேரம் அந்த்ப் பகுதியே ஸ்தம்பித்து விட்டது.

   எங்கள் குடும்ப நண்பர் என்ற அளவிலும் ஒரு தலைமை ஆசிரியர் என்ற அளவிலும் எனக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தந்தது இந்த விழா

   ஓய்வு பெறும் அவ்ர் அமைதியாகவும், இனிமையாகவும், வாழ வாழ்த்துக்கள்.



 



7 comments:

  1. வணக்கம்
    தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி போலதான் எனக்கும் இத்தனை வருடங்கள் எத்தனை கல்விமான்களை உயிர்ப்பித்து உள்ளார் அவரின் பணி மகத்தானது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தலைமை ஆசிரியர் திரு ஆர்.போஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  3. விழாவின் சிறப்புகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. avaraip parti sonna ungal manam valha

    ReplyDelete
  5. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:34 PM

    எல்லோரையும் நல்லவர்களாகவே சித்தரிக்கும் உங்கள் அழகான மனம் வாழ்க

    ReplyDelete