இந்த உலகில்
எப்படி வாழ்வதென்று தெரியவில்லை
உண்மையையே சொன்னால்
பெரிய அரிச்சந்திர மகாராஜா என்கிறார்கள்
தர்மப்படி நடந்தால்
மனுநீதிச் சோழனோ என்று இடிக்கிறார்கள்
மனிதநேயமாய் இருந்தால்
காந்திதான் என்று
இளக்காரமாய்ப் பார்க்கிறார்கள்
துணிவாகப் பேசினால்
பகத்சிங் னு நினைப்பு
என்று முணுமுணுக்கிறார்கள்
கவிதையை ரசித்து
எழுதிப்படித்தால் கூட
பாரதியாராக்கும் என்று
ஏளனச்சொல் சொல்கிறார்கள்
நான்
எப்படி இருக்க வேண்டுமென்று
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
என்று தெரியவில்லை
ஒன்று மட்டும் புரிந்தது
நான் எப்படி இருந்தாலும்
ஏதாவது பேசுவார்கள் போலும்
*****************************************************************
எப்படி வாழ்வதென்று தெரியவில்லை
உண்மையையே சொன்னால்
பெரிய அரிச்சந்திர மகாராஜா என்கிறார்கள்
தர்மப்படி நடந்தால்
மனுநீதிச் சோழனோ என்று இடிக்கிறார்கள்
மனிதநேயமாய் இருந்தால்
காந்திதான் என்று
இளக்காரமாய்ப் பார்க்கிறார்கள்
துணிவாகப் பேசினால்
பகத்சிங் னு நினைப்பு
என்று முணுமுணுக்கிறார்கள்
கவிதையை ரசித்து
எழுதிப்படித்தால் கூட
பாரதியாராக்கும் என்று
ஏளனச்சொல் சொல்கிறார்கள்
நான்
எப்படி இருக்க வேண்டுமென்று
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
என்று தெரியவில்லை
ஒன்று மட்டும் புரிந்தது
நான் எப்படி இருந்தாலும்
ஏதாவது பேசுவார்கள் போலும்
*****************************************************************
சிலருக்கு குறைகூற மட்டும்தான் தெரியும்
ReplyDeleteஅவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும்
பேசுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும்! நாம் நாமாகவே வாழ்வதே சரி!
ReplyDeleteஉண்மையை கவிதை மூலம் அழகாக சொல்லி இருக்கீங்க...பகிர்வுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
ஆகையால் உலகைப்பற்றி யோசிக்காது
சிகரம் நோக்கிய நம் பயணத்தைத் தொடர்வோம்
எளிமையான வார்த்தைகளில் அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteநிதர்சன கவிதை ...!
ReplyDelete