Saturday, June 14, 2014

என் இறைவா

என் இறைவா
மாயையில் திரியும் மனது
அரண்டு போகும் இதயம்
அழுது துடிக்கும் நேர்மை

உலகத்தின்
அட்சக்கோடுகளும் தீர்க்க ரேகைகளும்
சாதியின் பெயரால்
சங்கடப்பட வைக்கிறது

இனியென்ன
சாதியை,
சாமி என்பார்கள்
மதங்களில் நாட்டைச் சிதைப்பார்கள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
அட்சக்கோடுகளாய்
அசிங்கங்கள்
தீர்க்கக் கோடுகளாய்’
தேவையற்றதுகள்

அண்டை அயலாரின்
தேவைகள்
அடுத்தவனின் முகங்கள்
இவற்றைப் பற்றியே
இவர்களின் கவலைகள் நீள்வதால்
இவர்கள்
மனிதர்களில்லை
ம்னிதர்களுக்கான தகுதியும்
இவர்களிடம் இல்லை

அதனால் தான் என்னவோ
நாய், எருமை, கழுதை என்று
திட்டிக் கொள்கிறார்கள்
என்னவோ அதனின்
நற்குணங்கள் இவர்களிடம்
இருப்பது போல்

என் இறைவா
வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடுகிறது
நினைவுகளின் கூடுகளில்
வேதனைகளின் விளிம்புகளில்
ஏதோ ..என்னவோ...எப்படியோ
ஓடத்தான் செய்கிற்து
வியாபாரம் நடக்கிறது

நானே தலைவன்
நானே பெரியவன்
நானே அனைத்தும்
என்ற வெற்றுப் பேச்சுக்களாலேயே
எங்கள் வீதிகல்
அலங்கரிக்கப்பட்டு விட்டன

யார் தலைவன்?
யார் முதலாளி?
யார் பெரியவன்?

என் இறைவா
உனது அடிமைகளுக்குக்
கருணை கொடு

அவர்களின் அறியாமையை அழித்து
அன்பை புகட்டு
அவர்களின் வேதனையைத் துரத்தி
வெற்றியைத் தேடிக்கொடு
********************************************************


2 comments:

  1. அருமை சகோதரியாரே அருமை
    அன்பு பெருகட்டும்
    வெற்றி கிட்டட்டும்

    ReplyDelete