Saturday, June 14, 2014

என்னுரை

இந்தப் பகுதியில் நான் என் புத்தகத்தில் எழுதிய என்னுரைகள்
*******************************************************************

   கவிதைகள் என்பதே மனதின் பதிவுகள் தான். தனக்கு நேர்ந்தது எல்லாவற்றையும் சோகமாகவோ, சுகமாகவோ சொல்லி விடுபவர்கள் தான் கவிஞர்கள். அப்படித்தான் எனக்குள் நிகழ்ந்த ரசாயன மாற்றங்கள், கலவைகள், அழுகைகள் எல்லாவற்றையும் இதில் பதிவு செய்துள்ளேன். உங்களையும் பாதித்தால் என் வெற்றி சோதித்தால்....??


   அன்றாடம் நான் சுமக்கும் வேலைகள் , பேருந்துப் பயணம், நட்புரையாடல் என்று எல்லாவற்றையும் மீறி இந்த எழுத்துதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று முழுமையாக நம்புகிறேன். அது அப்படியே தொடரட்டும் என்பதே எனது வேண்டுதலும் கோரிக்கையும்.

இருபது நூல் எழுதிய பின்னும் சிலரைப் போல் நீ பிரபலமாகவில்லை என் இடித்துரைக்கிறாள் ஒரு தோழி. நான் எங்கே தவறுகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் எங்கேயோ தவறுகிறேன் என்பது மட்டும் தாம் புரிகிறது. விரைவில் அவள் ஆசைப்பட்டபடி நடக்கும் என்ற உத்தரவாதத்தை அவளுக்குத் தருகிறேன்.

எல்லோரையும் போலவே நான் சபிக்கப் பட்டவளாகவும், ஆசிர்வதிக்கப்பட்டவளாகவும் மாறி மாறித் தென்படுகிறேன். எனக்குள்ளேயே கோபமோ, வருத்தமோ, வேதனையோ, எனக்குள்ளான தாக்கத்தை எல்லா நிகழ்வுகளும் பெற்றுவிடுகின்றன். எனக்கு முன்பே கிடக்கும் தடைகளையும் முள்பாதைகளையும் சற்றே விலக்கி, தகர்த்துத் தான் நடக்கிறேன். எவ்வள்வு தூரமோ....கடக்கத்தான் ஆசைப்படுகிறேன். முடங்க இல்லை.

எப்போதும் போல் எனக்குள் பூத்த இரு தேவதைகள் சக்தி, ராகசூர்யாவிற்கும் எனது கணவர் செல்வக்குமார் கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்...

நேசங்களுடன்
செ.சுவாதி
M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,
புதுக்கோட்டை...622003
swathi.selva@yahoo.in


4 comments:

  1. தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை அருமை அருமை எளிமை இனிமை

    ReplyDelete
  4. விக்ரம்June 17, 2014 at 11:26 PM

    எல்லாப் புத்தகங்களுக்கும் எழுதிய என்னுரைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகத் தொகுத்து அளியுங்களேன்....என்ன தன பாலன் சார் நான் சொல்வது தானே சரி?

    ReplyDelete