Saturday, June 14, 2014

நான்

நிறைய படிக்க விரும்புகிறேன்...

கதை, கவிதை, கட்டுரை, எந்த வடிவமும் எனக்குப் பிடிக்கிறது

பெளர்ணமி காலங்கள் எனக்குப் பிடிக்கும்

சிறு பிராயத்தில் கட்டாயமாக கடவுளை வழிபட வலியுறுத்தப்பட்டதால் வழிபாடுகளை வெறுத்தேன்...

பின்னாட்களில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தேன்

23 வயதில்  திருமணமாகிவிட்டது

முனைவர் பட்டம் வாங்கி விட வேண்டும் என்று ஆசை

இன்னும் கூட படிக்க வேண்டும்

இது வரை படித்தது M.Com.,M.A.,M.Phil.,B.Lit.,D.T.Ed.,P.G.J.M.C.,P.G.D.V.E., தற்போது எம்.ஏ.தமிழ் படிக்கிறேன்.

I.A.S. ஆக ஆசைப் பட்டேன். அப்பா அம்மா ஒத்துக் கொள்ளவே இல்லை

அப்பாவாலும் அம்மாவாலும் நீண்ட துன்புறுத்தலுக்கு ஆளானேன். (தற்போது வரை)

வாசுகி, தினமலர் வாரமல்ர், சாவி(முன்நாளில் வந்தது) டி.ராஜேந்தரின் உஷா , குங்குமம், ராணி போன்ற இதழ்கள் என் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன கதையாக துணுக்குகளாக கவிதைகளாக

டி.ராஜேந்தரின் உஷாவில் அட்டைப் படத்தில் என் புகைப்படத்துடன் சாதனைப் பெண்மணி என்று செய்தி வெளியாகியது..

எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் இயக்குநர் திலகம் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்

இன்னும் தொடர்வேன்.....




4 comments:

  1. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதை தளத்தின் முகப்பில் (தலைப்பின் கீழ் [Profile]) கொண்டு வந்து விடலாம்...

    ReplyDelete
    Replies
    1. நிறைய தகவல்கள் சொல்ல நினைக்கிறேன் . அதனால் தான் இப்படிப் போட்டேன். சார்.... நன்றி சார்.

      Delete
  3. அட போட வைக்கும் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete