கனத்த இரவுகளால்
கறுகிப் போன
வயிற்றுப் பசியை
சும்மாடுக்குள் மறைக்கிறாள்
அந்த சித்தாள் காரி
நித்தம் நித்தம் வருகிறது
“பளிச்” சென்ற பகல்கள்
ஆனால்
பதுங்கிக் கொள்கிறது
இல்லாமையாலும்
இயலாமையாலும்
கனமான செங்கல்களை
சுமந்தும்
அவள் வாழ்வு
கனமாக வில்லை
சிமெண்டுக் கலவைகளைமிதித்தும்
அவள் வறுமை யை
மிதிக்க முடியவிலை
ஆறு மணிக்கு
எண்ணிக்கொடுக்கப்படும்
பணத்தாள்கள்!
எண்ணாத
கடன்களும் கவலைகளும்!
கூலி உயர்ந்ததைப் போலவே
விலைவாசியும் உயர
அந்த சும்மாடுக்குள்
எத்தனைசுமைகள்
தினமும் உதறி
தினமும் சுருட்டி
தலையில்
வைத்துக் கொள்கிறாள்
நாம் வைக்கும் “பூப்போல”
************************************
கறுகிப் போன
வயிற்றுப் பசியை
சும்மாடுக்குள் மறைக்கிறாள்
அந்த சித்தாள் காரி
நித்தம் நித்தம் வருகிறது
“பளிச்” சென்ற பகல்கள்
ஆனால்
பதுங்கிக் கொள்கிறது
இல்லாமையாலும்
இயலாமையாலும்
கனமான செங்கல்களை
சுமந்தும்
அவள் வாழ்வு
கனமாக வில்லை
சிமெண்டுக் கலவைகளைமிதித்தும்
அவள் வறுமை யை
மிதிக்க முடியவிலை
ஆறு மணிக்கு
எண்ணிக்கொடுக்கப்படும்
பணத்தாள்கள்!
எண்ணாத
கடன்களும் கவலைகளும்!
கூலி உயர்ந்ததைப் போலவே
விலைவாசியும் உயர
அந்த சும்மாடுக்குள்
எத்தனைசுமைகள்
தினமும் உதறி
தினமும் சுருட்டி
தலையில்
வைத்துக் கொள்கிறாள்
நாம் வைக்கும் “பூப்போல”
************************************
சுமந்த பழக்கப் பட்டவர்கள்
ReplyDeleteவாழ்க்கையையும்தான்
தம 1
படித்து முடிந்தபின் ஏதோ சுமை நம் தலை மீது ஏறியது போல் உள்ளது.
ReplyDelete