Monday, January 13, 2014

முகநூல் திருவிழா.

12.01.2014  அன்று ஆலங்குடியில் முகநூல் நண்பர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுப.செந்தில் குமார் என்ற நண்பர் இதற்காக துபாயிலிருந்து வந்து நிகழ்வை மிகவும் பொறுப்பேற்று செய்திருந்தார்.மாலை மிக சரியாக் 5.10 க்கு அனைவரும் ஆஜராகி விட்டோம். இரவு 8.40 க்கு முடிந்தது.விவேகானந்தரின் 151 பிறந்தநாளான நேற்று அவர் படத்தை பரிசாகக் கொடுத்தார் ஒரு நண்பர்.பாபுஜான் தலைமையில் கூட்டம் கலாய்ப்போடு கல கல வென்று பேச்சும் சிரிப்புமாய் நகர்ந்தது. ஆனந்தமுருகன்,மீனாட்சிசுந்தரம். சடதீஷ்,கவிபாலா,காசாவயல் கண்ணன், கீதா, செல்வக்குமார், கவிவர்மன், பிரகாசம், மதியழகன், ஞானவடிவேல், மோதிலால், ரமா, சுப,செந்தில்குமார், பாலாஜி, காந்தி, சாகுல் ஹமீதுநிறைவாக கவிஞர் நா.முத்துநிலவன்அய்யா ....இவர்களோடு நானும்... பேசினோம்.
இந்த கூட்டத்திற்கு ஆசிரியர், பொறியாளர், டாக்டர், ஜவுளிக்கடைக்காரர், மின் வேலை செய்பவர், M.B.A. மாணவர், என்று பல தரப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள் மட்டுமில்லை... பல தர வயதினரும் வந்திருந்தனர். அது தான் சிறப்பு.
மதுரை,,திண்டுக்கள், கறம்பக்குடி, பாப்பாவிடுதி,சென்னை,  என்று பல ஊர்களில் இருந்தும் வந்திருந்தன்ர். அது இன்னும் சிறப்பு
ஒருவர் தன் பேச்சில் இது ஃபேஸ்புக் மதம் என்றார் உணர்ச்சி வசப்பட்டு. இதில் 115 கோடி பேர் இருக்கிறார்கள் என்ன சாதி என்ன மதம் என்றில்லை என்றார் ஒருவர், 
இணையத்தின் மூலமாக நடந்த ஆட்சி மாற்றம், ஒரு சாதாரண கிராமத்தில் அடிப்படை வசதி வேண்டும் என்பது பற்றி முகநூலில் எழுதி அதை அவர்கள் நிறைவேற்றி விட்டு அந்த பஞ்சாயத்து தலைவர் அதை நிறைவேற்றி விட்டேன் என்றும் பதிவேற்றி இருந்தாராம்.அது ஆச்சரியமாக இருந்தது. 
விழிப்புணர்வை இதன் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்றார் மதியழகன். ஒரு மாணவனை நீ தமிழ்மீடியத்திலிருந்து வந்திருக்கிறாய் எனவே உன்னால் முகநூலில் நீடிக்க முடியாது என்றாராம் ஒருவர். ஆனால் அதை ஜெயித்துக் காட்டி இருக்கிறார். எனவே அந்த இளைஞாரை பொறுத்தவரை அவரை அது முன்னேற்றி இருக்கிறது. 
அந்தகாலத்தில் அம்மாபக்கத்து வீடுகளுக்கு பண்டிகைகாலங்களில் பலகாரம் கொடுத்து விடுவோம். ஆனால் இன்றோ பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு உள்ளரங்க விளையாட்டுகளை மட்டுமே பிள்ளைகளை அனுமதித்து இருக்கிறோம். அவரவர் துறையில் உள்ளதை பதிவேற்றினால் அதே துறையில் பணிபுரியும் மற்றவர்களும் மாற்றுத்துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளமுடியும். இன்னும் நம் மக்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க  வேண்டும்எல்லா மனிதர்களுக்குள்ளும் நன்மையும் தீமையும் கலந்து கிடக்கும். அல்லதை நீக்கி நல்லதை வலு பெறச்செய்ய நாம் முயல வேண்டும் என்றார் சுவாதி.
செந்தமிழ்நாடு,சந்தனக்காடு,சந்தங்கள்பாடு கைகளைக்கோறு என்று பாடினார் கண்ணன்.
முகநூலில் தன் குறிப்பு resume போட்டு அதன் மூலம் வேலை கிடைத்ததாம்.
வளைதளத்தையும் இணையதளத்தையும் நாம் ஆக்கப்பூர்வமாக பயன் படுத்தும் போது அதில் நன்மைகளைப் பெறமுடியும் மாறாக தீமைகளை நாடினோம் எனில் நம்மை அழித்து விடும் என்றார் ஒரு நண்பர்...
சைக்கிளை வளைப்பது கடினம். ஆனால் வாழ்க்கையை நேராக ஆக்குவது சிரமம் என்று சி ல சிறு கவிதைகளைவாசித்து கைதட்டல்களை பெற்றார் ஸ்டாலின் சரவணன்.
இனி மீண்டும் எப்போது இந்த கூட்டம் போட்டாலும் என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்றார் ஒரு நண்பர்.
ஒரு பெளர்ணமி நாளில் கூட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.
இது முகநூல் இல்லை அகநூல் உங்களை பிரதிபலிக்கிறது என்றார் ஒருவர்.
கவிவர்மன் நட்பாய் பேசினார்
தன் துறை மேம்பாடுகளைப் பற்றி அறியவும் செய்திகளைப் பறிமாறிக்கொள்ளவும் தான் அதனை பயன்படுத்துவதாகவும் கூறிவிட்டு. 
ரமாராமனாதன் இந்தக்கூட்டம் அமைத்ததும் அவர் மனம் மகிழ்ந்து பேசியதிலிருந்து தெரிந்தது.
தமிழ்நாட்டில் பாதிபேர் டாஸ்மாக்குக்கு அடிமை மீதி பேர் ஃபேஸ்புக்குக்கு அடிமை என்றார்.
ஒரு நண்பர் மூஞ்சிப் புத்தகம் என்றே குறிப்பிட்டு பேசினார்
அட! புதுக்கோட்டையில் இதற்கு கூடவிழா நடத்துவீர்களா? என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று தான் வந்தேன் என்றார் ஒருவர்.
ரோல்ஸ்ராய்ஸ் காரை நம் நாட்டில் குப்பைத் தொட்டியாக பயன் படுத்திய கதையைக் கூறினார்  மோதிலால்
செல்வக்குமார் பெண்கள் தயவு செய்து தங்கள் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என்றார்.
ஒருநண்பர் தன் குறும்படத் தலைப்பை வெளியிட்டார்.ஒவ்வொருவருக்கும் ஒரு தொடர்பு உண்டு மீதியை வெள்ளித்திரையில் காண்க என்றார்.
நேரத்தை அதிகம் நீடித்து இதிலேயே மூழ்காத வரையில் இது ஒரு அற்புதமான விசயம் தான் என ப் புரிந்தது. 
நிலவன் அய்யா.. எங்கேருந்து தான் அந்த சுறுசுறுப்பு வந்ததோ அவர் பாணியில் ஆழமாக பேசினார்..
எல்லோரும் சுப.செந்தில்குமாரை பாராட்டினார்கள்.கணேசன் ஆசிரியர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்றார். 
மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.
 Hide message history

நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு உறவினர் வீட்டு விஷேஷத்துக்கு போய் வந்த உணர்வில் பிரிய முடியாமல் பிரிந்தனர். . 
நட்பு என்றாலே கொள்ளை அழகு....உள்ளம் கொள்ளை போகும் அழகு....
குறும்படம் வெளியிட்டபோது....
வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர்.
சுவாதி பேசும் போது...



8 comments:

  1. அப்பாடா... முதன்முதலாக ஒரு நீண்ட உரைநடைப் பதிவு. மகிழ்ச்சி. வடிவமைப்புப் பற்றிப் போகப்போகத் தெரிந்து கொள்ளலாம். உள்ளத்தில் பதிந்ததை வலைப்பக்கத்தில் ப திந்துவிட்டீர்கள் கவிஞரே! தொடரட்டும் வாழ்த்துகள். உங்களுக்கும் தங்கள் கணவர் அன்புக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மூன்று படங்கள் போட்டிருப்பது போலத் தெரிகிறது, ஆனால் படங்கள் பார்க்கக் கிடைக்கவில்லையே! -இதில் என்ன ரகசியம்? அனைவரும் பார்க்கத் தரவேண்டியதுதானே? உள்ளே நுழைந்து சொடுக்கி இந்த...தொழில்நுட்பச் சிக்கலைச் சரிசெய்திட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. விழாவின் சிறப்பை உங்கள் பகிர்வின் மூலம் அறிய முடிகிறது... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சகோதரிக்கு வணக்கம்
    நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மிக அழகாக பதிவிட்டுள்ளீர்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
    ---------
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete
  5. நாகப்பன்June 7, 2014 at 10:57 PM

    இன்னும் இது போன்ற விழாக்கள் நடந்தால் என்னைய்ம் அழையுங்கள் சகோதரி. உங்கள் இன்பாக்ஸ்ல் என் போன் நம்பர் கொடுத்துள்ளேன் நன்றி

    ReplyDelete