வானத்திற்கு
எவ்வளவு தூரம் போகணும்?
கடலில்
ஏன் நடக்க முடியவில்லை?
தெய்வங்கள்
வாழ்ந்தார்களா?
இத்தனை
நிறங்கள் ஏன்
நமைச்சுற்றி?
அவ்வளவு
காய்கறியும் ஒரே நிறத்தில்
ஒரே சுவையில் இருக்கக்கூடாதா?
இப்படிப் பலப்பல்
கேள்விகள் கேட்கிறாள்
என் மகள்!
பதில் சொல்ல இயலாத நான்
என்
இயலாத்தனத்தை மறைத்து
இறைந்து விழுகிறேன்!
பள்ளிப் பாடங்களைப் படி
வேண்டாததைப் போட்டுக் குழப்பி
ஏன் இப்படி
உயிரை வாங்கறே என்று!
*************************************
எவ்வளவு தூரம் போகணும்?
கடலில்
ஏன் நடக்க முடியவில்லை?
தெய்வங்கள்
வாழ்ந்தார்களா?
இத்தனை
நிறங்கள் ஏன்
நமைச்சுற்றி?
அவ்வளவு
காய்கறியும் ஒரே நிறத்தில்
ஒரே சுவையில் இருக்கக்கூடாதா?
இப்படிப் பலப்பல்
கேள்விகள் கேட்கிறாள்
என் மகள்!
பதில் சொல்ல இயலாத நான்
என்
இயலாத்தனத்தை மறைத்து
இறைந்து விழுகிறேன்!
பள்ளிப் பாடங்களைப் படி
வேண்டாததைப் போட்டுக் குழப்பி
ஏன் இப்படி
உயிரை வாங்கறே என்று!
*************************************
அதற்காக இப்படியா கோபம் கொள்வது...?
ReplyDelete