Showing posts with label சந்தக் கவிதை. Show all posts
Showing posts with label சந்தக் கவிதை. Show all posts

Tuesday, September 29, 2015

காவிரியின் வளமை


காவிரியின் வளமைஎனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை..(மரபு)(காவடி சிந்து)எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை


நேசமுடன் அன்னையென
நெக்குருகும் காவிரியில்
          சலசல ஓசை வரும்--- மலர்

வாசமுடன் தென்றலது
வண்டமிழாய் பாய்புனலில்

          நலமென மீன்கள் எழும்

காவிரியின் தாலாட்டில்
கண்ணான நெல்மணிகள்
          கவினுற நடம்புரியும்-அந்தப்

பூவிரியின் மண்ணதுமே
பூணுகிற பசுமையில்

          புன்னகையின் தடம் தெரியும்

காவிரியின் வளமையது
காய்த்த கதிர் தோற்றமுடன்

          கழனியில் ஆடிவரும்---அதை
நாவினிலே கூறிவிட
நாற்றெழுதும் பாமரர் வாய்

        நற்றமிழும் ஓடி வரும்

பச்சை நிற சேலை கட்டும்
பொன்மருத வீதிகளில்
          பம்மிப் பம்மி ஓடிவரும்--தென்றல்

இச்சையோடு நித்தம் நித்தம்
இளமாதர் பூந்துகிலை
          தொட்டுத் தொட்டு பேசிவரும்

திண்ணான காளைகளும்
வன்மைமிகு காளையரும்
      வயல் காட்டில் ஆடிவர--அங்கே

பொன்னான நெல்மணிகள்
தன்னான பாடிக்கொண்டு
        தலை சாய்த்து பாடல் தரும்

நெற்காடு தலை சாய்த்து
புற்காடைப் பார்த்து ஒரு
      பூபாள ஓசை தரும்--அந்த

பொன்னான வேளையிலும்
பூவாக த் தமிழ் வந்து
           பன்னீராய் வாசமிடும்

குயிலோசை கேட்டு  நித்தம்
குன்றமே விழித்து விடும்
          கோபுரங்கள் சடசடக்கும்

ஊரெல்லாம் நீர் நிலைகள்
ஒய்யார வயல் சேர்த்து

      ஓவியம் போல் எழுந்து நிற்கும்

உழைபாலே விடியலிட்டு
உண்மையினை தன்னிலிட்டு
        ஊர்கூடி உவகையென்றால்

களைப்பெல்லாம் போக்கி அவர்
கருப்பான நேரத்திலே
      காதலையே தேடிவரும்

ஆற்றல்கள் குவிந்திருக்கும்
அம்புலியோ பார்த்திருக்க

        அம்மானை பாட்டு வரும்


எந்நேரம் இன்பந்தான்
எப்போதும் அன்பேதான்
          உழைப்பு தரும் ஊர் இதுவே

   
வந்தாரை வாழவைத்து
வாழ்வாங்கு வாழ்த்துஎன்று
          வாழ்க்கையினை தானம் தரும்

எந்நாளும் வாழ்த்திடுவோம்
ஏற்றமிகு நாடுஇது
          இன்பத்தையே நிறைத்து நிற்க
**********************************************************


தமிழின் திறமை

தமிழின் திறமை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 5 மரபுக்கவிதை



தமிழின் திறமை
*********************

வட்டில் தரும் பொட்டில் தமிழ்
முட்டும் இளம் கவிகள்--சொற்
கட்டில் நிலை மெட்டில் சுவை
கொட்டும் மன அலைகள்

சுற்றும் புகழ் பற்றும் தினம்
சொட்டும் புவி மனதில்--திணை
மொத்தம் நிகர் சித்தம்--அதில்
கொத்தும் மலர்க் கணைகள்

கள்ளும் பல சொல்லும் மது
அள்ளும் கவி மழையில்--அன்
புள்ளம் கலை வண்ணம்--கதிர்
கொஞ்சும் சுடர் இழையில்

திட்டம் பல கட்டும் இனி
பட்டம் பெறும் தமிழில் சொற்
குற்றம் தரும் ஏட்டில்--கனம்
செப்பும் தளிர் பாட்டில்

நித்தம் ஒரு சத்தம் உலை
கத்தும் வனக்குயிலில்--அதில்
பட்டும் நிலை கெட்டும் --தமிழ்
கொட்டும் கதிர் ஒளியில்

நெருப்பும் துறுவெறுப்பில்--மனம்
விரு(ம்)ப்பும் தனிப் புலமை--ஒரு
திருப்பம் இது முறிப்பம் எனில்
தகிக்கும் தன் திறமை.
**************************************************8

Monday, September 28, 2015

எங்கள் தேசம்


தேசம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************

வகை காவடி சிந்து
*************************



வெற்றி நடமிடும் தேசம்-என்றும்
 பொங்கிப்பெருகிடும் நேசம்---தினம்

     வளம் கொட்டிட மதுரக்கவி
     அதனைக் கொடு மனமொத்திட---------------வாராய்--இங்கு
                                                                                            பாராய்



பெற்றி வடமிடும் நேரம் --எங்கள்
பாரதம் பேசிடும் தீரம்----அவர்

     மனமொத்திட தரம் கொட்டிட
     களம் பற்றிட கவியும் புனை____________-------நாடு--பண்

                                                                                                 பாடு



மின்னி மறையிடும் தீயும் ---இங்கு
வந்து பிறந்திடும் சேயும்---பலர்

     நலம்பற்றிட தினம் கற்றிட
     பெருமைப்படு வறுமைகெடு-----------------------அழியும்---தனம்
                                                                                                வழியும்


வண்ண மிகையிடும் நாடு---என்றும்
வந்து இதனையே நாடு

     பசுமைகொடு பகைமைகெடு
     பரிவில்மூட பழமைகெடு---------------------------இன்றே---குணக்
                                                                                                குன்றே

******************************************************************************    

சிந்து தரும் தூது

சிந்து தரும் தூது எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************



தன்னதன தான தானத் தான
தன்னதன தான தானத் தான
தன்னதன தான தானத்தான------தனதானா

கொஞ்சிவரும் மேகம் காணக் காண
நெஞ்சிலொரு மோகம் ஏறிப்போக
வஞ்சியுனைத் தேடிப் பாடும் பாடல் ----தமிழாகும்

துள்ளித்திரி பாவை போல நாடும்
வெள்ளியென ஞானம் மேவ, கூடும்
வெள்ளமென இன்பம் சேரச் சேர ---வருவாயே

தும்பையதில் மேவும் போது
அம்பலவன் மேனி நீறு; நீறு
விம்மியெழும் ஞானம் சேரும் பாதை ---தெளிவாகும்

குற்றமதில் வாழும் மாயக்கூட்டம்
சுற்றமிடை தேயும் தீயக் கேடு
முற்றுமழிந்தோடும் போகப்போக---நிறைவாக

நன்மையதும் கூடிக் கோர்க்க கோர்க்க
இன்னலதும் தீர்ந்து ஓடிப்போக
கன்னலுமாய் நானும் தேறிப்போக----வளமாக

வந்துவிடும் காலம் நாதம் போல
சிந்துதரும் தூது வேதம் போல
முந்திவரும் போதில் சூழச்சூழ---தமிழாகும்

என்னிலொரு பாடல் சூடச்சூட
தென்மதுரை மீனாள் ஆடிப்பாடி
கன்னியெனை நாளும் பார்க்கப் பார்க்க---வருவாளே

எந்தமிழும் பூவாய்ச் சேரச் சேர
தந்தருளும் தேவி வாராய் வாராய்
முந்திவரு பாவாய் தாராய்,தாயாய்,-----கவியாக
*********************************************************************888

தமிழின் மேன்மை```

தமிழின் மேன்மை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை5 மரபுக்கவிதைப்போட்டி
*************************************

தன்னத்தன தன்னத் தனதன
தன்னத்தன தன்னத் தனதன
தன்னத்தன தன்னத் தனதன------தனதானா

                        
எண்ணத்தினில் வண்ணக்குமிழிடும்
பண்ணிற்கவி என்னிற் பெருகிட
தண்ணிற்புவி மெல்லப்பரவிட- ---நிறைவாக

பட்டுத்தறி இட்டுத்தரவென
எட்டுத்திசைக் கொட்டிக்களித்திட
சிட்டுக்கவி பல்கிச் சிறந்திட-----வளமாக

தங்கத்தமிழ் வைத்துக்குலவிடும்
எங்கட்தமிழ் பொங்கிப்புகழிட
திங்கட்சுடர் சிங்கத்தமிழென-----தலைதூக்கு

கொற்றக்களம் பற்றிப்படிந்திட
சுற்றித்தரும் கொட்டிக்களமிட
கற்றுத்தரும் முற்றப்பழமென ----தமிழாக

தெள்ளக்கவி தெங்கிற்சுவைதர
கள்ளிற்சுவை அன்னச்சுகம் எழ
பிள்ளைசுகம் பொங்கிப் பொலிவுற-----வருதாமோ?

சொல்லிற்சுகம் தங்கிக் கமழிட
இல்லில்வளம் பொங்கிப் பொலிவுற
கல்லும்கவி தொட்டுப்பரவசம் -------அடையாதோ?

விண்ணில் அலை கோள்கட் பணிசெய
புண்ணிற்புதை உள்ளம்மகிழிட
தண்ணிற்கவி தந்தத் தமிழெனும்-----அமிழ்தாமே?

மின்னற்பொறி மிஞ்சிப்பொலிவுற
கன்னற்சுவை தன்னிற் சுவைமிக
பொன்னின்மிகு செம்மைச் சுடரென-----தமிழாகும்
*********************************************************




(இதை வேண்டியோர் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம்))))

பின்குறிப்பு....புதுக்கோட்டையில் இருந்தால் எழுதக்கூடாது என்று நானாக நினைத்துக் கொண்டிருக்க 22ம் தேதிவரை சும்மா இருந்து விட்டு எல்லோரும் எழுதணும் நு சொன்னவுடனே யோசிச்சு....யோசிச்சு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிட்சைக்குக்கூட இத்தனை மணிவரை படிக்கலை சாமி...இதோட தனபாலன் அய்யா நிலையை கேளுங்க...போஸ்டிங் போட்டுட்டு போட்டுட்டு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறேன்...

இனி யாரும் சந்தக்கவிஞர் சுவாதி எங்கே என்று குறுஞ்செய்தி அனுப்புவார்களா என்ன? ( இது அப்படி அனுப்பிய அன்பு நெஞ்சத்துக்கு மட்டும்)

Wednesday, January 8, 2014

உயர்ந்தோங்கும் ( காவடி சிந்து வகை)

நடமிடும் மொழிதனில் டடமிட வடமிட
கடுமையின் சினமதும் குறைபட நிலையதும்
                                                                     பணியும்-பகை
                                                                     தணியும்

முடமதும் முனகிட மினிவரும் மயலிட
கடமையில் கவிதரும் கமழிடும் புகழிடும்
                                                                     சந்தம் -தமிழ்
                                                                      சிந்தும்

திடமிடும் கவிகளூம் திறம்பல பறையிட
மறமிடும் கதையினை மகிழவே உரையிட
                                                                       தேடி-புகழ்
                                                                           பாடி

கடலென  கவியினில் அலையெழ உலவிடு
கனியெனில் சுவைதரும் தமிழது முதலிடம்
                                                                         பாடு-விருப்
                                                                          போடு


மடமையில் தவழிடும் மனிதரும் அழிபட
மதமதில்பலியிடும் மடையரும் அழிபட
                                                                சீறும்-தமிழ்ப்
                                                                 பாரும்

கடமையில் பழகிடத தழுவிடும் தமிழதும்
மொழியினில் முதல்மொழி உலகினில்  தலைமொழி
                                                                  என்றார்-அது
                                                                   நன்றாம்

குடமதில் ஒளியென மறையிட திரையிட
அனைவரும் முனைவதும் அழிவினைத் தருவதும்
                                                                  முறையா-சதித்
                                                                    துறையா

வடபுலம் வளமையின் நெறிகெட சிறையிட
இனியது நடவுமா? மலையெனத் தமிழதும்
                                                                         ஓங்கும்-உயர்ந்
                                                                          தோங்கும்

**********************************************************************



Tuesday, January 7, 2014

பாரதி எனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே- மெட்டு
********************************************
பாரதியார் எனும் போதினிலே-ஒரு
பாசம் பிறக்குது உள்ளத்திலே
சாரதியாம் அவன் நாட்டினுக்கு- புதுச்
சக்தியைத் தந்தனன் பாட்டினுக்கு!

பெண்மையைப் போற்றிடு நாட்டினிலே-சாதி
பேதம் ஒழித்திடு வீட்டினிலே
அன்பினால் மக்களை வென்றி டென்றான் - தமிழ்ப்
பண்பினால் பாரதம் போற்றிடுவான்

பூவிரிச் சோலையில் வீடுகட்டி - அங்கு
பாவிரித் தாடிட கூடுகட்டி
கத்திடும் குயிலதன் ஓசையினை - அவன்
நித்தமும் கேட்டிட விரும்பிடுவான்!
*******************************************

தமிழ் வாழ்த்து (சந்தப்பாடல்)

தான தனத்தன தான தனத்தன
தன்ன தனத்தனனா- தன


* வானம் பொழிந்திட பூமி நிறைந்திட
   வந்து பிறந்ததுவே- மனம்
   நாளும் இனித்திட கானம் படித்திட
   வெல்லும் செழுந்தமிழே

* கூனல் ஒழிந்திட கோணல் அகன்றிட
   கல்லும் கரைந்திடவே- நலம்
   மேவும் எனத்தமிழ் மேலும் உரைத்திட
   மண்ணும் சிரித்ததுவே

* பாயும் நிலந்தனில் வாழும் உயிர்களும்
   இன்பம் பயின்றிடவே- இனி
   சேயும் மகிழ்ந்திட சீலம் உயிர்த்தது
   செம்மை மலர்ந்திடவே

*எங்கும் முகிழ்த்தது ஈகை நிறைத்தது
   இன்பம் உயர்ந்திடவே- தமிழ்
   எங்கும் செழித்தது சந்தம் கொழித்தது
   வங்கத்தெழும் அலையாய்

******************************************************

Thursday, October 31, 2013

தமிழ் வாழ்த்து- காவடி சிந்து வகை

*  உலகினில் சிறந்ததென் தமிழே- தங்கக்
                                                  குமிழே-உன்றன்

கனவினில் தொடர்ந்ததென் வழியே-உனைத்
தொடர தொடர மனம் சுடர சுடர தினம்
                                                       துடிக்கும் ம்- சிந்து
                                                        படிக்கும்


*  மதியினில் படருதுன் பாடல் - ஒரு
                                               நாடல்- எந்த

வயதிலும் தொடர்ந்துனைத் தேடும் - மது
பருகி பருகி தினம் பலமுறை படித்தனள்
                                                  மயலால்- இந்தத்
                                                   தையலால்    

*  உயிரினில் விளையுமென் மொழியே- அருள்
                                                             விழியே- இசைப்

பயிரதும் துளிர்ந்திடும் வழியே - சிறு
தழலிலெரியுமெனை தனதில் சுமந்தயிளம்
                                                        கொடியே-புகழ்க்
                                                          கொடியே

* மடமையில் உழலுது உலகம் - பல
                                                   கலகம்- எனின்

கடமையில் கவிகளே கமழும் - அவை
சிறக்க சிறக்க நலம் பிறக்க பிறக்க வந்து
                                                     அருளாய்-உயர்ப்
                                                       பொருளாய்

*****************************************************************